விஜய்க்கு கொலை மிரட்டல்.. திமுக நிர்வாகி மீது தவெக பரபரப்பு புகார்!
Author: Udayachandran RadhaKrishnan13 December 2024, 4:08 pm
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கிய நடிகர் விஜய், முதல் மாநாட்டை நடத்தியது பெரும் பேசுபொருளாக மாறியது.
அவர் பேசிய கருத்துக்கு எதிராக தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விஜய்யை விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக பேச்சாளர் ராணவன் என்பவர் விஜய்க்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: இந்துக்கள் மீது தீராத வன்மம்.. திமுக அரசு மீது வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!
நெல்லையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் ராவணன் என்பவர் விஜய் குறித்து ஆபாசமாக பேசியுள்ளார். விஜய் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என்றும், நாங்கள் கத்தியோடு பேசுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக ராவணவன் மீது தவெக புகார் அளித்துள்ளது.
தவெக ஆதரவாளர் ஜலீல் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என தவெக எதிர்பார்த்துள்ளது.