2024ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட டாப் 3 ஊட்டச்சத்துக்கள்!!!

Author: Hemalatha Ramkumar
13 December 2024, 4:08 pm

2024 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள இந்த சமயத்தில் ஆரோக்கியம் மற்றும் உடல் நலன் புதிய டிரெண்டாக மாறி வருகிறது. மக்கள் உணவை கவனமோடு சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். மேலும் சுய பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இந்த சமயத்தில் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான மெக்னீசியம், வைட்டமின் D, சிங்க் மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்படி இருக்க 2024 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட ஊட்டச்சத்துக்களின் முதல் மூன்று இடங்களை பிடித்தவை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சின்க் 

சின்க் என்பது செல்களின் செயல்பாடு ஆரோக்கியமாக நடைபெறுதல், சரும ஆரோக்கியம் மற்றும் காயங்களை ஆற்றுதல் போன்றவைக்காக மிகவும் அவசியமானது. மேலும் இது நம்மை பொதுவான உடல்நல பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு உதவுகிறது. கோவிட்-19 ஏற்பட்டதற்கு முன்பு வரை பலருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் சிங்கின் முக்கியமான பங்கு பற்றி தெரியவில்லை. ஆனால் தற்போது இது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு அதிகம் தேடப்பட்ட ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக அமைகிறது.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் 

இந்த வருடம் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் தேடப்பட்ட ஊட்டச்சத்துக்களின் பட்டியலில் முதலிடத்தை கொண்டுள்ளது. நாள்பட்ட வீக்கம் மற்றும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராடுவதற்கான தீர்வுகளாக இந்த ஊட்டச்சத்து அமைகிறது. மோசமான உணவு, மன அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் காரணமாக ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை சரி செய்வதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் முக்கிய பங்கு கொண்டுள்ளது. இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றிய புரிதல் இப்போது ஏற்பட்டுள்ளது.

இதையும் படிச்சு பாருங்க: கொத்து கொத்தா முடி கொட்டினாலும் சரி… முருங்கை இலை எண்ணெய் ஒன்னு இருந்தா போதும்… ஆல் பிராம்லம் சால்வ்டு!!!

வைட்டமின் B12 

பலர் வைட்டமின் B12 குறைபாடு காரணமாக சோர்வு, மனநிலை மாற்றம் மற்றும் ரத்த சோகை போன்ற அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். இது மோசமான உணவு அதிலும் குறிப்பாக விலங்கு சார்ந்த உணவுப் பொருட்கள் இல்லாத டயட் மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை ஆகியவை இதற்கு காரணம். பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கும் வைட்டமின் B12 குறைபாடு இருக்கும் தொடர்பு இருப்பது ஆய்வுகள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் B12 என்பது ஆற்றல், மூளை செயல்பாடு மற்றும் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்திக்கு அத்தியாவசியமான ஒரு ஊட்டச்சத்து களஞ்சியமாக அமைகிறது. வைட்டமின் B12 குறைபாடு காரணமாக ஏற்படும் இந்த அபாயங்கள் குறித்து தெரியும் பொழுது மக்கள் அந்த குறைபாட்டை சரி செய்வதற்கான உணவு மற்றும் சப்ளிமெண்ட்சுகளை தேட ஆரம்பிக்கின்றனர்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!