டெய்லி நைட் தூங்குறதுக்கு முன்ன இத ஒரு கிளாஸ் குடிச்சு பாருங்க.. தூக்கம் சும்மா சொக்கும்…!!!

Author: Hemalatha Ramkumar
13 December 2024, 6:00 pm

வெல்லம் என்பது பதப்படுத்தப்படாத ஒரு இயற்கை இனிப்பானாக அமைகிறது. இதில் முக்கியமான மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. வெல்லம் நம்முடைய உடலுக்கு தேவையான பல நன்மைகளை கொண்டுள்ளது. மேலும் இதனை பாலோடு கலந்து பருகும் பொழுது அது பாலிற்கு ஒரு கிரீமியான அமைப்பை சேர்க்கிறது. பாலில் வெல்லம் கலந்து குடிப்பதால் இரவு நேரத்தில் குடிப்பதால் சிறந்த சரும பராமரிப்பு, அதிக நோய் எதிர்ப்பு சக்தி, நல்ல செரிமானம் மற்றும் தரமான தூக்கம் போன்ற பல நன்மைகளை அளிக்கிறது. மன அழுத்தம் வயிற்றில் ஏற்படும் அசௌகரியம் மற்றும் தூக்க கோளாறுகள் போன்ற பல உடல்நல சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வெல்லம் கலந்த பால் ஒரு இயற்கை சிகிச்சையாக அமைகிறது என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. எனவே இரவு தூங்குவதற்கு முன்பு வெல்லம் கலந்த பால் பருகுவதால் கிடைக்கும் நன்மைகளை ஒவ்வொன்றாக இந்த பதிவில் பார்க்கலாம்.

நல்ல செரிமானம் 

பால் மற்றும் வெல்லம் ஆகிய இரண்டுமே செரிமானத்தை மேம்படுத்தி வயிறு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்வதற்கு ஒரு அற்புதமான பொருளாக விளங்குகின்றன. வெல்லத்தில் உள்ள அதிக நார்ச்சத்து காரணமாக இது மலச்சிக்கலை போக்கி, மலம் எளிதாக வெளியேறுவதற்கு உதவுகிறது.

தரமான தூக்கம் 

வெல்லத்தில் மெக்னீசியம் என்ற தாது அதிகம் இருப்பதால் இது நரம்பு  அமைதிப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் தசைகளுக்கு ஓய்வளித்து மன அழுத்தத்தை குறைத்து, மனதையும் சாந்தப்படுத்துகிறது. இதனால் இது நல்ல தரமான தூக்கத்திற்கு உதவும் காம்பினேஷனாக அமைகிறது.

இதையும் படிச்சு பாருங்க: தூக்கி வீசுற கிரீன் டீ பேக் வச்சு இவ்வளோ விஷயம் பண்ணலாமா…???

நோய் எதிர்ப்பு சக்தி 

வெல்லத்தில் பீனாலிக் கெமிக்கல்கள் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இருப்பதால் இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது. இந்த ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், சளி, இருமல், காய்ச்சல் போன்ற பொதுவான தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாப்பதற்கும் அத்தியாவசியமானவை.

நல்ல சருமம் 

சிங்க் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் வெல்லத்தில் இருப்பது அழகான சருமத்தை பெற உதவுகிறது. சிங்க் சருமத்தை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து பாதுகாத்து, வயதான அறிகுறிகளை தாமதப்படுத்துகிறது. மேலும் சிங்க் கொலாஜன் உற்பத்தியை தூண்டி, சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தி அதனை இறுக்கமாக வைக்கிறது.

வலுவான பற்கள் மற்றும் எலும்புகள் 

வயது தொடர்பாக ஏற்படும் எலும்பு தேய்மானத்தை தவிர்த்து, எலும்பு வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு பாலில் வெல்லம் கலந்து பருகுங்கள். இது உங்களுடைய எனாமலை வலுவாக்கி, பற்களில் சொத்தை ஏற்படுவதை குறைக்கும். மேலும் இது நல்ல வாய்வழி ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான சிறந்த வழி.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!