திரை விமர்சனம்:ரசிகர்களை கொண்டாட வைத்ததா..சூது கவ்வும் 2..!

Author: Selvan
13 December 2024, 9:22 pm

இயக்குனர் எஸ்.ஜே. அர்ஜுனின் சூது கவ்வும் 2 பார்வை!

2013 ஆம் ஆண்டு இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியாகி வெற்றியை கண்ட படம் சூது கவ்வும்,அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகமாக தற்போது சூது கவ்வும் 2 வந்துள்ளது.

Soodhu Kavvum 2 storyline

இந்த புதிய படத்தை இயக்குனர் எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கியுள்ளார். படத்தில் மிர்ச்சி சிவா, கருணாகரன், எம். எஸ். பாஸ்கர், ராதா ரவி போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

கதையின் சுருக்கம்

இப்படத்தின் முதல் பாகத்தில் நடிகர் கருணாகரன் அரசியலில் என்ட்ரி கொடுத்து பின்பு நிதி அமைச்சராக மக்களால் 3 முறை தேர்வு செய்யப்படுகிறார். இவர் ஊழல் செய்து ஒரு கட்டத்தில் மாட்டிக்கொள்கிறார்.

இதையும் படியுங்க: சினிமா பிரபலங்களுக்கு என்ன ஆச்சு…விவாகரத்து வாங்கிய பிரபல நடிகை…!

இந்நிலையில் கடத்தல் தொழில் செய்து வரும் மிர்ச்சி சிவா நிதி அமைச்சர் கருணாகரனை கடத்திவிடுகிறார்.இதன் பின்னர் என்ன நடக்கிறது? கருணாகரன் தன் பிரச்சனைகளிலிருந்து விடுபடுகிறாரா? இவர்களுக்கிடையில் வெற்றியாளராக யார் இருக்கிறார்? என்பது படத்தின் மீதிக் கதை.

Soodhu Kavvum 2 box office collection

அரசியல் குறித்த வசனங்கள்,மிர்ச்சி சிவா செய்யும் நகைச்சுவை படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது.நகைச்சுவையை தவிர்த்து படத்தில் சொல்லிக்கிடும் அளவிற்கு எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.

படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.சூது கவ்வும் முதல் பாகத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் சூது கவ்வும் 2 ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Suchitra Tease Ajithkumar வயசான காலத்துல அஜித்துக்கு இதெல்லாம் தேவையா? வார்த்தையை விட்ட பிரபலம் : ரசிகர்கள் ஆவேசம்!