காலை உணவுக்கு வேக வைத்த முட்டையா… ஆம்லெட்டா… இரண்டுல எது பெஸ்ட்???
Author: Hemalatha Ramkumar14 December 2024, 11:07 am
காலை உணவுக்கு ஹெல்தியான மற்றும் சிறந்த ஒரு பிரேக்ஃபாஸ்ட்டை தேர்வு செய்ய வேண்டும் என்று வரும் பொழுது வேக வைத்த முட்டைகள் மற்றும் ஆம்லெட் ஆகியவை சிறந்த ஆப்ஷன்களாக உள்ளன. இதன் தனித்துவமான பண்புகள் மற்றும் உடலுக்கு வழங்கும் நன்மைகள் காரணமாக பலர் காலையில் முட்டை சாப்பிடுவதை விரும்புகின்றனர். முட்டை என்பது விரைவாக செய்யக்கூடிய அதே நேரத்தில் குறைந்த கலோரிகள், புரோட்டீன், வைட்டமின்கள் A, B12 மற்றும் செலினியம் போன்ற முக்கியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்களைக் கொண்டுள்ளது.
இந்த ஊட்டச்சத்துக்கள் நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவது, பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை தருவது மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவது போன்ற நன்மைகளை வழங்குகிறது. முட்டைகளை எண்ணெய் அல்லது கொழுப்புகள் எதுவும் சேர்க்காமல் வேகவைத்து சாப்பிடுவது புரோட்டீனின் சுத்தமான ஒரு ஆதாரமாக அமைகிறது. இது நமக்கு வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு இது ஒரு ஆரோக்கியமான ஆப்ஷன்.
இதையும் படிச்சு பாருங்க: மசாலா ஃபிரைடு சிக்கன்… சண்டேக்கு ஏற்ற சரியான ரெசிபி இது தான்!!!
மறுபுறம் ஆம்லெட் என்பது வண்ணமயமான காய்கறிகள், சீஸ், பட்டர் மற்றும் ஆரிகானோ போன்ற பிளேவர்ஃபுல்லான மூலிகைகள் சேர்த்து செய்யப்படுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் நம்முடைய காலை உணவை திருப்திகரமானதாக மாற்றி ஆரோக்கியமான தசை, செரிமானம் மேம்பாடு மற்றும் ஆரோக்கியமான இதயத்தை தருகிறது. எனினும் ஆம்லெட் செய்யும் போது நீங்கள் அளவுக்கு அதிகமான எண்ணெய் பயன்படுத்துவது புத்திசாலித்தனமான யோசனையாக இருக்காது.
அது உங்களுடைய உணவை சற்று ஆரோக்கியமற்றதாக மாற்றிவிடும். வேகவைத்த முட்டைகளுடன் ஒப்பிடும்பொழுது ஆம்லெட்டில் அதிக கலோரிகள் காணப்படுகிறது. எனினும் உங்களுடைய நாளை ஒரு சரிவிகித ஊட்டச்சத்து நிறைந்த உணவோடு ஆரம்பிப்பதற்கு இது ஒரு திருப்திகரமான ஆப்ஷன். நீங்கள் வேகவைத்த முட்டை அல்லது ஆம்லெட் எதனை தேர்வு செய்தாலும் புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும். இறுதியாக சிறந்த ஒரு பிரேக்ஃபாஸ்ட் ஆப்ஷன் என்பது உங்களுடைய தனிப்பட்ட உணவு சார்ந்த இலக்குகள் மற்றும் விருப்பங்களை பொறுத்து அமையும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.