கழிவுநீர் தொட்டியில் துடிதுடித்த இரண்டு உயிர்கள்.. சிவகாசியில் மூண்ட சோகம்!

Author: Hariharasudhan
14 December 2024, 11:58 am

சிவகாசியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள விஸ்வந்தம், காகா காலனியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகள் ராஜேஸ்வரி. ராஜேஸ்வரிக்கு திருமணம் முடிந்து தர்ஷன் என்ற மகன் இருந்தார். இதனிடையே, குடும்பத் தகராறு காரணமாக, ராஜேஸ்வரி கணவனைப் பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், தந்தை முத்தையா வீட்டின் அருகே கணேசன் என்பவர் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். அதிலும், புதிய வீட்டிற்காக கழிவுநீர் தொட்டியும், மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் கணேசன் அமைத்து வருகிறார். இதற்காக சுமார் 8 அடி ஆழத்தில் குழியும் தோண்டப்பட்டு உள்ளது.

Mother and son died in viswanatham sivakasi

இந்த நிலையில், தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழையின் ஒரு பகுதியாக, சிவகாசியிலும் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் இரு கழிவுநீர் தொட்டிக்காக அமைக்கப்பட்ட குழியில் தண்ணீர் நிரம்பி இருந்துள்ளது. இந்த நிலையில், சிறுநீர் கழிப்பதற்காக தர்ஷன் குழி அருகே சென்று உள்ளார்.

Mother and son died in viswanatham sivakasi Virudhunagar

அப்போது, அச்சிறுவன் தவறுதலாக குழியில் விழுந்து உள்ளார். இதனால் எழுந்த சிறுவனின் அலறல் சத்தத்தைக் கேட்டுச் சென்று பார்த்த தாய் ராஜேஸ்வரி, தனது மகனைக் காப்பாற்ற முயன்று உள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக தாயும், மகனும் அந்த குழியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன்.. சிறையில் இருந்து வெளியே வந்த அல்லு அர்ஜூன் உருக்கம்!!

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து அறிந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Dil Raju and Ram Charan collaboration கேம் சேஞ்சர் தோல்வி: ராம் சரணின் நெகிழ்ச்சி செயல்…மகிழ்ச்சியில் தில் ராஜு..!