ஒரு ஆண்டுக்குள் பெரியார் வீட்டில் அடுத்தடுத்து சோகம்.. சிவாஜி முதல் ஸ்டாலின் வரை.. ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்து வந்த பாதை!

Author: Hariharasudhan
14 December 2024, 1:41 pm

சிவாஜி கணேசனை அரசியல் குருவாக ஏற்றுக் கொண்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், இன்று உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார்.

சென்னை: கடந்த 1948ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி, பெரியார் வீட்டுப் பேரனாக பிறந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் (EVKS Elangovan), டிசம்பர் 14, 2024-ல், அதாவது சரியாக 75வது பிறந்தநாளுக்கு ஒரு வாரம் இருக்கும்போது காலமாகி உள்ளார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி இறந்திருப்பது, காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு இன்று இரங்கல் தெரிவித்துள்ள நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் போன்று, அன்று தனது மாணவர் காங்கிரஸ் பருவத்தில் நடிகரும், தமிழக முன்னணி கட்சித் தலைவருமான சிவாஜி கணேசனால் ஈர்க்கப்பட்டவர். ஏன், அவரை அரசியல் குருவாகவும் ஏற்றுக் கொண்டவர்.

EVKS Elangovan Political history in tamil

பின்னாளில், நடிகரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆர் உடன் இணைந்து, அவரது மறைவிற்குப் பிறகு சிவாஜி கணேசனுக்கு ஆதரவாக தனது முதல் சட்டமன்ற பதவியைத் துறந்து ஜானகி அணிக்காக நின்றவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். அது மட்டுமின்றி, மூப்பனார் பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை நிறுவியதை அடுத்து, அதனை காங்கிரஸ் உடன் இணைக்க அரும்பாடுபட்டவர்.

இதையும் படிங்க:

அது மட்டுமின்றி, பல தேர்தல்களில் தோல்வியைத் தழுவினாலும், கோபிசெட்டிப்பாளையம் எம்பியாகத் தேர்வு செய்தபோது, மத்தியில் மன்மோகன் சிங் ஆட்சியில், மத்திய ஜவுளித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். அதோடு, இரண்டு முறை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து, அதன் சோதனை காலத்தில் அப்போது ஆண்ட திமுகவை தனது விமர்சனத்தால் திரும்பிப் பார்க்க வைத்தவர் எனலாம்.

ஆனால், அதே திமுக உடன் காங்கிரஸ் கைகோர்க்கும் நிலை வந்தபோதும், பல இடங்களில் தனது நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருந்தவராக ஈவிகேஎஸ் அறியப்பட்டார். ஆனால், அவரது வீட்டில் ஒரு இருள் சூழ்ந்தது. அதுதான, அவரது மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமாக இருந்த திருமகனின் மறைவு.

இதற்குப் பிறகு, திமுக தயவுடன் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, மீண்டும் கிட்டத்தட்ட 39 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். இந்த நிலையில் தான், மகன் இறந்த ஒரு ஆண்டுக்குள் தந்தையும் இறந்து, குடும்பத்தில் மட்டுமின்றி, கட்சியினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

  • Dil Raju and Ram Charan collaboration கேம் சேஞ்சர் தோல்வி: ராம் சரணின் நெகிழ்ச்சி செயல்…மகிழ்ச்சியில் தில் ராஜு..!