கொண்டாட்டத்தில் கணவர்…திண்டாட்டத்தில் மனைவி…ஊரை காலி பண்ண சூப்பர் நடிகை முடிவு…!
Author: Selvan14 December 2024, 2:52 pm
கணவரால் அல்லல் படும் சூப்பர் நடிகை
தமிழ் சினிமாவில் சூப்பர் நடிகையாக இருந்தவர்,தற்போது விவாத நடிகையாக மாறி வருகிறார்.நாளுக்கு நாள் இவரை பற்றி சோசியல் மீடியாவில் கருத்துக்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
இந்த இக்கட்டான தருணத்தில் தன்னுடைய குடும்பத்தை கவனித்து கொண்டே படத்திலும் மும்மரமாக நடித்து வருகிறார்.இந்நிலையில் சூப்பர் நடிகையின் கணவர் அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகிறார்.
இவர் பேருக்கு தான் படத்தை இயங்குவதாகவும்,ஒழுங்கக்காக பட வேலைகளை பார்க்காமல் தேவையில்லாத பல விசயங்களை பண்ணிட்டு,சூப்பர் நடிகைக்கு தொல்லையாக மாறி வருகிறார்.
இதையும் படியுங்க: பிக் பாஸ் வீட்டுக்கு படையெடுத்த பிரபல நடிகர்…உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தல்..!
இதனால் அவர் படத்தில் நடிக்கும் சில ஹீரோக்கள் தங்களுடைய கால் ஷூட்டை தவிர்த்து வருகின்றனர்.இதனால் பட தயாரிப்பாளர்கள் சூப்பர் நடிகைக்கு கால் செய்து கணவருக்கு அறிவுரை கூறுங்கள் என்று புலம்பி வருகின்றனர்.
இதற்கிடையில் அவருடைய கணவர் திடீரென அரசாங்க சொத்தை வளைத்து போட பிளான் பண்ணியுள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அரசாங்க சொத்தை யாராவது விலைக்கு தருவார்களா….இந்த அறிவு கூட இல்லாம எப்பிடி நீங்கள் படத்தை எல்லாம் எடுக்குறீங்க..என்று நெட்டிசன்கள் ஒரு பக்கம் கழுவி ஊத்தி வருகின்றனர்.
ஏற்கனவே ஒல்லி நடிகர்,மூன்று பத்திரிகையாளர்கள் என பலரிடம் அடிமேல் அடி வாங்கிட்டு இருக்கும் நிலையில்,தற்போது கணவரும் தொல்லை கொடுத்து வருவதால் குடும்பத்தோடு சென்னைக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு,மும்பை பக்கம் போய் தலைமறைவு ஆகிருலாமா என திட்டம் தீட்டி வருகிறார் சூப்பர் நடிகை.