அரசின் அலட்சியத்தால் அழியும் கிராமம்.. பெட்டி, படுக்கையுடன் வெளியேறிய மக்கள்!
Author: Udayachandran RadhaKrishnan14 December 2024, 5:44 pm
கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே உள்ள மேலவன் கீழ வன்னியூர் நெடும்பூர் வானகரம் பேட்டை கொத்தவாசல் சிவக்கம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலை தற்போது வீராணம் ஏரியிலிருந்து வெள்ளையங்கால் ஓடை திறக்கப்பட்ட உபரி நீர் புகுந்து சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: கடற்கரை காவல் நிலையத்தில் இசைவாணி.. 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இதுவரை அரசு சார்பில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என கூறி பாய் தலகாணி உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு கிராமத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில் இதுவரை எந்த ஒரு அதிகாரிகளும் எங்களை பார்க்கவில்லை எனக் கூறி செல்கின்றனர்