குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்க சிறு பிள்ளையிலேயே அவர்களுக்கு கற்றுத் தர வேண்டிய வாழ்க்கை திறன்கள்!!!
Author: Hemalatha Ramkumar14 December 2024, 5:10 pm
நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் தரக்கூடிய மிகப்பெரிய பரிசுகளில் ஒன்று அவர்கள் வளர்ந்தவுடன் தன்னம்பிக்கையாகவும், சுதந்திரமாகவும் வாழ்க்கையை வாழ்வதற்கான திறனை கொடுப்பது ஆகும். உணர்வுகளை கட்டுப்படுத்துதல், தெளிவாக பேசுதல், திடமான முடிவு எடுக்கும் திறன் போன்றவை நீண்டகால வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கு மிகவும் அவசியம். இந்த அத்தியாவசிய திறன்கள் கொண்ட பிள்ளைகள் சவால்களை எளிதாக கையாளுவதோடு மட்டுமல்லாமல், உறவுகளை எப்படி அமைப்பது மற்றும் நிலையில்லாத இந்த உலகத்தில் எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை பெற்றுத் தர உதவும். எனவே உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் வளமாக இருப்பதற்கு அவர்களுக்கு நீங்கள் கற்றுத் தர வேண்டிய சில வாழ்க்கை திறன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தெளிவாக பேசும் திறன்
குழந்தைகள் ஒரு கூட்டத்தில் இருக்கும் பொழுது எப்படி பேசுகிறார்கள் என்பதை ஊக்குவிப்பதற்கு வீட்டில் நடக்கும் விவாதங்களில் அவர்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். அவர்கள் நினைக்கக்கூடிய விஷயங்களை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தெளிவாக வெளிப்படுத்துவதற்கான அனுமதியை நீங்கள் வழங்க வேண்டும். மேலும் அது மட்டுமல்லாமல் பிறர் பேசும் பொழுது அதனை கவனமாக கேட்கவும், அவர்களுடைய இடத்திலிருந்து அவர்கள் சொல்லும் விஷயத்திற்கு மதிப்பு கொடுக்கவும் கற்றுத் தருவது அவசியம்.
உணர்வு கட்டுப்பாடு
ஒரு குழந்தையின் உணர்வு மற்றும் சமூக மேம்பாட்டின் அடித்தளம் என்பது உணர்வுகளை அவர்கள் எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதை பொறுத்து அமைகிறது. குழந்தைகள் பொதுவாக மகிழ்ச்சி, எரிச்சல் போன்ற வலிமையான உணர்வுகளை அனுபவிப்பார்கள். ஆனால் இதனை எப்படி கையாள வேண்டும் என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது பெற்றோர்களின் கடமை.
இதையும் படிச்சு பாருங்க: காலை உணவுக்கு வேக வைத்த முட்டையா… ஆம்லெட்டா… இரண்டுல எது பெஸ்ட்???
பொருளாதார அறிவு
பணத்தை நோக்கிய ஒரு குழந்தையின் எண்ணத்தை பட்ஜெட், சேமிப்பு மற்றும் அத்தியாவசியம் மற்றும் தேவைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் போன்ற எளிமையான யோசனைகள் மூலமாக உருவாக்கலாம்.
நேரக் கட்டுப்பாடு
நேரத்தை சிறப்பாக கையாள தெரியும் வித்தை தெரிந்த குழந்தைகள் நல்ல கவனிப்பு திறனை கொண்டிருப்பார்கள். வேலைகளை குறித்த நேரத்திற்குள் செய்து முடித்து, அவர்களுடைய வேலைகளை சிறப்பாக நிறைவேற்றுவார்கள். மேலும் ஒரு வழக்கத்தை உருவாக்கி, திட்டங்களை அமைத்து, கடுமையான வேலைகளை கூட சின்ன சின்ன வேலைகளாக பிரித்து செய்யக்கூடிய திறன்களை கற்றுக் கொள்வார்கள்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.