வின்டர் வந்தா பொடுகு தொல்லை தாங்க முடியலன்னு கவலைப்படும் நபர்களுக்காகவே இந்த பதிவு!!!
Author: Hemalatha Ramkumar14 December 2024, 6:06 pm
குளிர்காலத்தில் பலர் சந்திக்க கூடிய பொதுவான பிரச்சனைகளின் பட்டியலில் நிச்சயமாக பொடுகு இருக்கும். ஷாம்பூ, கண்டிஷனர் மற்றும் சரியான ஹேர் மாஸ்க்குகள் பயன்படுத்துவதன் மூலமாக வழக்கமான முறையில் உங்களுடைய மயிர்க்கால்களை சுத்தம் செய்வது மிகவும் அவசியம். இந்த பழக்கங்கள் ஆரோக்கியமான மயிர்க்கால்களை பராமரிக்கவும், தலைமுடியின் தரத்தை மேம்படுத்தவும் உதவும். பொடுகை என்பது வறண்ட தோல், பூஞ்சை தொற்றுகள் அல்லது நீங்கள் பயன்படுத்தும் ஒரு சில ஹேர் ப்ராடக்டுகளின் காரணமாக ஏற்படலாம். இந்த பிரச்சனைகளின் விளைவால் அரிப்பு மற்றும் எரிச்சல் உண்டாகிறது.
பொடுகை சமாளிப்பதற்கான சிகிச்சை என்பது சற்று சவாலானதாக இருக்கலாம். ஆனால் நீங்கள் தொடர்ச்சியாக அதற்கு பராமரிப்பு மற்றும் தீர்வுகளை பயன்படுத்தும் பொழுது நிச்சயமாக அதிலிருந்து மீண்டு வரலாம். எனவே உங்களுடைய பிரச்சனையிலிருந்து நிரந்தர தீர்வு தரக்கூடிய எளிமையான மற்றும் திறமையான வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகர் என்பது பொடுகை விரட்டுவதற்கான மிகவும் எளிமையான ஒரு வழி. இதற்கு நீங்கள் ஒரு கப் குளிர்ந்த தண்ணீரில் ஒரு கப் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து தலைமுடிக்கு ஷாம்பு செய்த பிறகு இந்த கலவையை உங்களுடைய மயிர்க்கால்களில் பயன்படுத்த வேண்டும். பிறகு பொறுமையாக மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீரில் தலைமுடியை அலசுங்கள்.
தலைமுடியை கழுவுதல்
ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 2 முறையாவது தலைமுடியை அலசுவது பொடுகை தடுப்பதற்கான ஒரு சிறந்த வழி. அழுக்கு, எண்ணெய் மற்றும் எந்த விதமான ப்ராடக்டுகள் மயிர்க்கால்களில் சேருவதை இந்த வழக்கமான சுத்தம் செய்தல் தவிர்க்க உதவும்.
இதையும் படிச்சு பாருங்க: குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்க சிறு பிள்ளையிலேயே அவர்களுக்கு கற்றுத் தர வேண்டிய வாழ்க்கை திறன்கள்!!!
தேங்காய் எண்ணெய்
பொடுகுக்கு சிகிச்சை அளிப்பதில் தேங்காய் எண்ணெய் அற்புதமான ஒரு பொருளாக விளங்குகிறது. தேங்காய் எண்ணெயோடு எலுமிச்சை சாறு கலந்து அதனை மயிர்க்கால்கள் முதல் தலைமுடியின் வேர் வரை தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு வழக்கமான தண்ணீர் பயன்படுத்தி தலைமுடியை அலசலாம்.
ஆரோக்கியமான உணவு
ஊட்டச்சத்து மிகுந்த உணவு சாப்பிடுவது பொடுகை தடுப்பதில் ஒரு முக்கிய பங்கு கொண்டுள்ளது. ஜிங்க், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் B வைட்டமின்களை உங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆலிவ் எண்ணெய், அவகாடோ, வால்நட் பருப்புகள் மற்றும் ஒமேகா-3 அதிகமாக உள்ள மீன்களை சாப்பிடுவது உங்களுடைய மயிர்க்கால்களை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவும். இதன் மூலமாக நீங்கள் பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.