இளம் நடிகைகளுக்கு குறி…இயக்குனர் “சீனு ராமசாமி” விவாகரத்தின் பின்னணி… பகிரங்கமாக பேசிய பயில்வான்..!
Author: Selvan14 December 2024, 7:03 pm
சினிமா உலகில் சீனு ராமசாமியின் சர்ச்சை
தற்போது இருக்குற காலகட்டத்தில் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமல் விவாகரத்து பெற்று பிரிந்து செல்கின்றனர்.அதுவும் குறிப்பாக சினிமா பிரபலங்கள் மத்தியில் இந்த விவாகரத்து நிகழ்வு சர்வ சாதாரணமாக மாறி வருகிறது.
இந்நிலையில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தன்னுடைய மனைவியை பிரிவதாக சமூக வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.தற்போது அவருடைய விவாகரத்துக்கான காரணத்தை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதில் சீனு ராமசாமி ஆரம்பகாலகட்டத்தில் ஒளிப்பதிவாளராக இருந்து பின்பு உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.இவர் பல புத்தகங்களை எழுதி இருக்கிறார்,அதனை அப்படியே சினிமாவில் கொண்டு வரவேண்டும்னு இயக்குனராக மாறினார்.
இதையும் படியுங்க: 10 வருடம் கழித்து பாருங்க….சூர்யாவிடம் சவால் விட்ட சிவகார்த்திகேயன்..!
இவர் தர்ஷனா என்ற பெண்ணை திருமணம் செய்து கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளார்.இவர் 2013 ஆம் ஆண்டு இடம் பொருள் ஏவல் திரைப்படத்தை இயக்கும் போது அப்படத்தில் நடித்த நடிகை மனிஷா யாதவிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக புகார் ஒன்று எழுந்தது.
அந்த சமயத்தில் இந்த நிகழ்வு அவர் மீது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.தற்போது இவர் மீண்டும் வீட்டுக்கு செல்லாமல் தன்னுடைய அலுவகத்திலே தாங்கிவருவதாகவும்,சில சமயம் வீட்டிற்கு தாமதாக செல்வதாலும், கணவன்-மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் அவர்கள் பிரிந்து இருக்கலாம் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.