அல்டிமேட்டான டேஸ்ட்ல பாரம்பரிய ஆப்ரிக்க மீன் குழம்பு ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
14 December 2024, 7:17 pm

ஒரு சிலருக்கு மீன் குழம்பு என்ற சொன்ன உடனேயே வாயில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். ஒவ்வொரு இடத்திற்கு தகுந்தார் போல மீன் குழம்பை ஒவ்வொரு விதமாக செய்வார்கள். மீன் குழம்பு ரெசிபி நாட்டுக்கு நாடு கூட வேறுபடுகிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது ஆப்பிரிக்க மீன் குழம்பு ரெசிபி. இது ஆப்பிரிக்காவில் அற்புதமான சுவையில் மஞ்சள் சாதத்தோடு பரிமாறப்படுகிறது. இப்போது ஆப்பிரிக்கா மீன் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

மீன் துண்டுகள் 

எண்ணெய் 

வெங்காயம் 

தக்காளி 

இஞ்சி மற்றும் பூண்டு

கறிவேப்பிலை 

பச்சை மிளகாய் 

மசாலா பொடி 

புளி கரைசல் 

உப்பு மற்றும் சர்க்கரை

தேங்காய்ப்பால் 

கொத்தமல்லி தழை

செய்முறை 

முதலில் ஒரு தோசை கல்லில் எண்ணெயை சூடாக்கி சுத்தம் செய்து நறுக்கிய மீன் துண்டுகளை அதில் சேர்த்து இரு பக்கங்களும் சிவந்து வரும்படி பொரித்து எடுத்து ஓரமாக வைத்துக் கொள்ளலாம். 

இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் சேர்த்து அது பொன்னிறமாக மாறியவுடன் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். இரண்டு நிமிடங்களுக்கு பிறகு அரைத்த தக்காளியை சேர்த்து கறிவேப்பிலை ஒரு கொத்து சேர்த்து கிளறவும். 

இதையும் படிச்சு பாருங்க: நுரையீரலில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ள உதவும் டீடாக்ஸ் பானங்கள்!!!

மஞ்சள் தூள் மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு புளிக்கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கிளறுங்கள். 

இறுதியாக தேங்காய் பால் சேர்த்து குழம்பு கொதிக்கும் பொழுது அதில் மீன் துண்டுகளை போட்டு, 10 நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடலாம். அவ்வளவுதான் சுவையான ஆப்பிரிக்கா மீன் குழம்பு தயார்.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 59

    0

    0

    Leave a Reply