கல்யாணம் ஓவர்…சின்னத்திரை நடிகருக்கு மனைவி போட்ட பதிவு…இதெல்லவா காதல்…!
Author: Selvan15 December 2024, 2:22 pm
சிறகடிக்க ஆசை வெற்றி மனைவி போட்ட பதிவு
விஜய் டிவியின் முன்னணி சீரியலான சிறகடிக்க ஆசை தொடரில் நடித்து பிரபலம் ஆனவர் வெற்றி வசந்த்.இவர் அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியல் நடிகையான வைஷ்ணவியை காதலித்து வந்தார்.
இவர்கள் இருவரும் குடும்பத்தின் சம்மதத்தோடு சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுடைய திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு நடிகை வைஷ்ணவி,தனது கணவர் வெற்றியை குறித்து உருகி மனமார காதல் பதிவு போட்டுள்ளார்.
இதையும் படியுங்க: GV-க்கு 100…SK-க்கு 25 : சுதா கொங்கரா படத்தின் மாஸ் கூட்டணி….படத்தின் அப்டேட் வெளியீடு..!
அதில் அவர்,என்னை மிகவும் நேசித்ததற்கு ரொம்ப நன்றி, என் முகத்தில் இந்த அளவு மகிழ்ச்சியை நான் இதுவரை பார்த்தது இல்லை.என்னை சிரிக்க வைக்கிறீர்கள், உங்களுடன் இருப்பது எனக்கு சந்தோசமாக உள்ளது எனவும்,இந்த சந்தோஷத்தை வேறு யாராலும் உங்களை தவிர கொடுக்க முடியாது, இந்த அளவிற்கு என்னை பற்றி நான் யாரிடமும் இவ்வளவு வெளிப்படையாகசொன்னது இல்லை.
என்னை முழுவதும் நீங்க புரிந்து இருக்கீங்க என உருகி உருகி ஒரு பெரிய பதிவு போட்டுள்ளார்.
அதற்கு வெற்றி வசந்த் ஐ லவ் யூ மா என கமெண்ட் செய்து இருக்கிறார்.இவர்களுடைய அன்பான காதலுக்கு ரசிகர்கள் பல வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்