ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் பிரபல டி.ஜி.பி மகள்…டாடா இயக்குனரின் அடுத்த பட அப்டேட்..!
Author: Selvan15 December 2024, 4:08 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி, தனது 34வது படத்தில் அடியெடுத்து வைக்கிறார்.இந்த புதிய படத்தை ‘டாடா’ திரைப்பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்க, ஸ்கிரீன் சீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கிறது.
படம் வடசென்னை பகுதிகளை மையமாக கொண்டு உருவாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.படத்துக்கான திரைக்கதை மற்றும் வசனங்களை, மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் மற்றும் இயக்குநர் கணேஷ் பாபு இணைந்து எழுதியுள்ளனர்.
ரத்னகுமார் இதற்கு முன்பு மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய வெற்றி படங்களுக்கு திரைக்கதை எழுதியிருப்பதால்,இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்க: கல்யாணம் ஓவர்…சின்னத்திரை நடிகருக்கு மனைவி போட்ட பதிவு…இதெல்லவா காதல்…!
இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நடிக்க உள்ளார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் நுழைகிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் 5-வது முறையாக ஜெயம் ரவியின் படத்துக்கு இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நாளை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.