முட்டையை வைத்து பாயாசமா… அதுவும் முட்டை வாசனை கொஞ்சம் கூட வராம…!!!

Author: Hemalatha Ramkumar
16 December 2024, 7:31 pm

சேமியா பாயசம், பாசிப்பருப்பு பாயசம், பயித்தம் பருப்பு பாயசம், ஜவ்வரிசி பாயசம், பால் பாயாசம், தினை பாயாசம் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் முட்டையை வைத்து கூட பாயாசம் செய்யலாம் என்று சொன்னால் நிச்சயமாக நீங்கள் ஆச்சரியப்படலாம், கோபப்படலாம். இருப்பினும், இதுதான் உண்மை. நீங்களே அசந்து போற மாதிரி முட்டையை வைத்து அசத்தலான பாயசம் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பால் – 3/4 லிட்டர் 

பால் பவுடர் – 4 டேபிள் ஸ்பூன் 

முட்டை – 4 

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

பாதாம் பருப்பு – 10 

பிஸ்தா பருப்பு – 10 

முந்திரி பருப்பு – 10 

உலர்ந்த திராட்சை – 10

சாரப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் 

ஏலக்காய் பொடி – 1/2 டேபிள் ஸ்பூன் 

ரோஸ் வாட்டர் – ஒரு டேபிள் ஸ்பூன் 

குங்குமப்பூ – 2 சிட்டிகை

செய்முறை 

பாயாசம் வைப்பதற்கு ஒரு பாத்திரத்தை எடுத்து அதனை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி 10 பாதாம், 10 முந்திரி, 10 பிஸ்தா பருப்பு, 2 டேபிள் ஸ்பூன் சாரப்பருப்பு ஆகியவற்றை உங்களுக்கு விருப்பமான அளவுகளில் சிறிது சிறிதாக உடைத்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

இந்த நட்ஸ் வகைகள் அனைத்தும் வறுபட்டவுடன் 10 உலர்ந்த திராட்சைகளை சேர்த்து வறுத்துக் கொள்ளலாம். நட்ஸ் வகைகள் மற்றும் உலர்ந்த திராட்சை வறுபட்டவுடன் அதில் 3/4 லிட்டர் அளவு பால் ஊற்றி கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் 4 டேபிள் ஸ்பூன் அளவு பால் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். 

இப்போது இந்த பாயாசத்திற்கு தேவையான 1/2 கப் சர்க்கரை சேர்த்து கிளறவும். இப்போது அடுப்பை குறைவான தீயில் வைத்து கொதிக்க விடுங்கள். அதே சமயத்தில் 2 முட்டைகளை வேகவைத்து அதன் வெள்ளைக்கருவை துருவி அதனையும் கொதித்துக் கொண்டிருக்கும் பாலோடு சேர்த்து கிளறவும். 

இதையும் படிச்சு பாருங்க: செருப்பு போடாம நடக்குறதால கூட ஆரோக்கியத்தில் மாற்றம் வருமா…???

இது பாலில் கரையாமல் அப்படியே சேமியா போல இருக்கும். மேலும் 2 முட்டைகளின் வெள்ளை கருவை அப்படியே பச்சையாக சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக 2 சிட்டிகை குங்குமப்பூ, 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள், ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கிளறவும்.

10 நிமிடங்கள் அப்படியே கொதிக்க வைத்து பால் கெட்டியாகி மஞ்சள் நிறத்தில் மாறியவுடன் அடுப்பை அணைத்து விடலாம். நிச்சயமாக இது முட்டையில் செய்த பாயாசம் என்று யாரும் கண்டுபிடிக்கவே மாட்டார்கள்.

  • maharaja movie director got bmw car gift மாபெரும் வெற்றியை ருசித்த மகாராஜா…இயக்குனருக்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு..!
  • Views: - 68

    0

    0

    Leave a Reply