குளித்துக் கொண்டிருந்த கொளுந்தியா… அக்கா கணவரின் சபல புத்தி : கடைசியில் டுவிஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan17 December 2024, 12:29 pm
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே பூபதி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சதீஷ்(30). கட்டிட தொழிலாளி. இவரது மனைவியின் சகோதரி கணவனை இழந்த நிலையில் தனது மகனுடன் ஜோலார்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருகிறார்.
இதையும் படியுங்க: அதிகாலையில் கோரம்.. டிப்பர் லாரி மோதி சிதறிப் போன வாகன ஓட்டியின் உடல்.!!
இந்நிலையில் மனைவியின் சகோதரி என்கிற முறையில் சதீஷ் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து செல்வாராம்.
கொளுந்தியா குளிப்பதை செல்போனில் படம் பிடித்த அக்கா கணவர்
அதேபோல் நேற்று காலை வீட்டிற்கு சென்ற சதீஷ், மனைவியின் சகோதரி குளித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு தெரியாமலேயே சதீஷ் தனது செல்போனில் வீடியோ எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையறிந்த அந்தப் பெண் கூச்சலிடவே சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் இது குறித்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சதீசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக சதீசின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஆய்வு செய்தபோது, அதில் பல பெண்களின் குளியலை வீடியோவாக பதிவு செய்து வைத்திருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.