இந்த ஜூஸ் தினமும் உங்க டயட் இருந்தா யங் லுக் உங்களுக்கு சொந்தம்!!!
Author: Hemalatha Ramkumar17 December 2024, 12:27 pm
பொதுவாக நாம் 25 வயதை அடைந்த பிறகு கொலாஜன் உற்பத்தி குறைய ஆரம்பிக்கும். நாம் 40 வயதை அடையும் பொழுது கொலாஜன் முற்றிலுமாக நின்று சுருக்கங்கள், மெல்லிய கோடுகள் மற்றும் தொங்கிய தோல் ஏற்பட ஆரம்பிக்கும். இந்த அத்தியாவசிய புரோட்டீனுக்கு ஆதரவு தருவதற்கு பல்வேறு கொலாஜன் சப்ளிமென்ட் இருந்தாலும் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும் பானங்களை உங்களுடைய டயட்டில் சேர்ப்பது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, உங்கள் சருமத்தை இளமையாக பராமரிப்பதற்கு உதவும் ஒரு இயற்கையான வழியாகும்.
இந்த பானங்கள் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடன்ட்களை கொண்டிருப்பதால் உங்களுடைய சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் இருந்து அதனை பாதுகாத்து கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். அந்த வகையில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து இயற்கையான முறையில் பொலிவான சருமத்தை பெற்று வயதான அறிகுறிகளை தடுப்பதற்கு உதவும் ஆரோக்கியமான ஜூஸ் வகைகள் சிலவற்றை பற்றி பார்க்கலாம்.
கேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸ்
கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகமாக இருப்பதால் இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி, வயதான அறிகுறிகளை உண்டாக்கும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை தடுக்கிறது. இதனோடு ஆரஞ்சு பழங்களை சேர்க்கும் பொழுது அதில் உள்ள அதிக வைட்டமின் C நம்முடைய சருமத்தை இளமையாகவும், பொலிவாகவும் தோன்றுவதற்கு உதவுகிறது.
அன்னாசி பழம் மற்றும் இஞ்சி ஜூஸ்
அன்னாசி பழத்தில் கொலாஜன் உற்பத்திக்கு முக்கியமான ஒரு ஊட்டச்சத்தான வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. மேலும் இஞ்சியில் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் UV கதிர்களுக்கு எதிராக பாதுகாக்கும் பண்புகள் காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல் கருவளையம் மற்றும் பிக்மென்ட்டேஷன் குறைப்பதற்கு இது உதவுகிறது.
வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை ஜூஸ்
வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை ஆகிய இரண்டுமே புத்துணர்ச்சி அளிக்கும் பொருட்கள். இவற்றை ஒன்றாக பருகும் பொழுது நமக்கு பொலிவான சருமம் கிடைக்கும். இவற்றில் உள்ள நீரேற்றும் பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் அமைப்பை மேம்படுத்தி, சுருக்கங்களை குறைத்து சமமான தொனியை தருகிறது.
இதையும் படிச்சு பாருங்க: அதிக நேரம் லேப்டாப் முன்னாடி செலவு செய்யறவங்க முதுகெலும்பை கவனிச்சுக்க உதவும் டிப்ஸ்!!!
பீட்ரூட் மற்றும் தக்காளி ஜூஸ்
பீட்ரூட் என்பது பீட்டாலைன்களின் அற்புதமான மூலமாக இருக்கிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தில் ஏற்படும் எரிச்சலை ஆற்றுகிறது. மேலும் தக்காளியில் உள்ள லைக்கோபீன் கொலாஜன் உற்பத்தியை தூண்டி, சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி மென்மையான சருமத்தை தருகிறது.
கிவி மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்
கிவி பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி கொலாஜன் உருவாக்கத்திற்கு உதவி, சருமத்தின் நெகிழ்வுத் தன்மை மற்றும் தொனியை மேம்படுத்தி, சுருக்கங்களை குறைக்கிறது.
கற்றாழை மற்றும் பப்பாளி ஜூஸ்
கற்றாழை மற்றும் பப்பாளி ஜூஸ் ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கும் ஒரு வலிமையான பானம். இந்த பானம் நமது உடலில் உள்ள நீர்ச்சத்தை தக்க வைத்து, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, இளமையான மற்றும் மினுமினுப்பான சருமத்தை அளிக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.