சீரியலில் மட்டும் ராஜா, ராணி இல்ல… ஆல்யா – சஞ்ஜீவ் ஜோடியின் அடுத்த பிரம்மாண்டம்!
Author: Udayachandran RadhaKrishnan17 December 2024, 1:05 pm
விஜய் டிவியில் ராஜா, ராணி சீரியல் மூலம் பிரபலமான ஜோடி ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக். இருவரும் சீரியலில் நடிக்கும் போது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கெண்டனர்.
ஆல்யா மானசா வாங்கிய சொகுசு கார்
தற்போது ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் புதிதாக கருப்பு நிற மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு கார் வாங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இதையும் படியுங்க: கோலிவுட்டை குறி வைக்கும் பாலிவுட்… சல்மான் கான் படத்தில் அறிமுகமாகும் பிரபலம்!!
அந்த வீடியோவை ஷேர் செய்த ஆல்யா, தனது உழைப்பின் தத்துவத்தை கேப்ஷனில் பகிர்ந்துள்ளார். “சத்தம் இல்லாமல் கடின உழைப்பை செய்தால், உங்களின் வெற்றி எதுவும் வலைக்காரமாகும். சில சொகுசு கார்கள் சாலையில் வந்தாலும், கடின உழைப்பில் என்ன முடிவுகள் கிடைக்கும் என்பதே நிச்சயம். எதுவுமே முடியாது என்று முடங்கிவிடுவது முழுக்க முழுக்க முட்டாள்தனம்” என அவர் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஏராளமான லைக்கள் மற்றும் வாழ்த்துகளை வழங்கியுள்ளனர்.