பிக் பாஸ் வீட்டில் திடீர் விபத்து :மருத்துவமனையில் பிரபலம்…வெளிவந்த வீடியோவால் ரசிகர்கள் சோகம் ..!

Author: Selvan
17 December 2024, 3:26 pm

போட்டியாளர் ராணவ் மருத்துவமனையில் அனுமதி

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் எட்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில்,வாரந்தோறும் போட்டியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட டாஸ்கில் கலந்து கொண்டு வெற்றி பெற முயற்சிக்கின்றனர்.

Ranav hospitalized Bigg Boss Tamil

சமீபத்தில் நடைபெற்ற டாஸ்கின் போது போட்டியாளர் ராணவ் விபத்துக்குள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த வார டாஸ்கில், போட்டியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கற்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.மற்ற போட்டியாளர்கள் தங்களது கற்களைப் பாதுகாக்க முயற்சித்தபோது, ராணவ் அவர்களை தடுக்க முயன்றார். அப்போது, ஜெஃப்ரி அவரை தள்ளியதில் ராணவின் தோள்பட்டை காயம் அடைந்தது.

இதையும் படியுங்க: விக்னேஷ் சிவனை திருமணம் பண்ணது தப்பு : மனம் திறந்து பேசிய நயன்தாரா…காரணம் இதுதான்..!

[yop_poll id=”1″]

விபத்து ஏற்பட்ட பிறகு சிலர் ‘கண்டெண்ட்டிற்காக நடிக்கிறார்’ என்று கிண்டல் செய்தனர். குறிப்பாக ஜெஃப்ரி மற்றும் செளந்தர்யா இதை விமர்சித்த காட்சிகளின் வீடியோ வெளியாகியுள்ளது.

பின்பு பிக்பாஸ் குழுவினர் ராணவிற்கு உடனடியாக மருத்துவ உதவி அளித்து, அவரை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மருத்துவமனையில் ராணவ் சிகிச்சை பெற்று வருகிறார், அவர் நலமாக இருப்பதாகவும் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் பிக்பாஸ் குழு அறிவித்துள்ளது.இதனால், ராணவ் போட்டியில் தொடர்வாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்த இந்த திடீர் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி,ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!