“படையப்பா”படத்தில் சூரி…வெளிவந்த தகவல்…ஆச்சரியத்தில் கே.எஸ்.ரவிக்குமார்….!

Author: Selvan
17 December 2024, 5:12 pm

படையப்பா படத்தில் சூரியின் சிறிய வேலை

தமிழ் திரையுலகில் நடிகர் சூரி தன்னுடைய திறமையால் காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்.இவர் நிறைய படங்களில் கூட்டத்தில் ஒருவராக நின்றுள்ளார்.

Soori hero journey

இவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பபெரிய திருப்புமுனையாக அமைந்த படம் “வெண்ணிலா கபடி குழு” இப்படத்தில் வரும் பரோட்டா காமெடி சீனில் நடித்து ரசிகர்களால்,பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார்.

இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன் சினிமா சம்பந்தமான பல வேலைகளை பார்த்துள்ளார்.அந்தவகையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படையப்பா திரைப்படத்தில் நடிகர்களுக்கு FAN ஆபரேட்டர் பண்ணும் வேலையே பார்த்துள்ளார்.

Soori work in padayappa movie

இதை அவர்,சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.அதே மாதிரி நடிகர் அஜித் நடித்த வில்லன் படத்திலும் பட செட்டில் சின்ன சின்ன வேலைகளை பார்த்துள்ளார்.இந்த தகவலை கேட்ட கே எஸ் ரவிக்குமார் ஆச்சர்யத்தில் உறைந்து,நடிகர் சூரியை அந்த பேட்டியில் பாராட்டி இருப்பார்.

இதையும் படியுங்க: பிக் பாஸ் வீட்டில் திடீர் விபத்து :மருத்துவமனையில் பிரபலம்…வெளிவந்த வீடியோவால் ரசிகர்கள் சோகம் ..!

ஹீரோவாக மாறிய சூரி
இவர் முதன்முதலாக ஹீரோவாக நடித்த விடுதலை படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து படங்களில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள விடுதலை 2 படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.இப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி மஞ்சு வாரியர் உட்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Highest paid bodyguards in Bollywood கோடிகளை அள்ளும் சினிமா பிரபலங்களின் பாடிகார்ட்ஸ்…சம்பளத்தை கேட்டிங்கனா ஷாக் ஆவீங்க..!
  • Views: - 57

    0

    0

    Leave a Reply