அந்தரங்க உறுப்பிலும் டாட்டூ? திருச்சி ஏலியன்ஸ் விசாரணையில் திடுக் தகவல்கள்!

Author: Hariharasudhan
17 December 2024, 5:56 pm

திருச்சியில், நாக்கைப் பிளந்து டாட்டூ போட்டது மட்டுமல்லாமல், அந்தரங்க உறுப்புகளிலும் டாட்டூ (Tattoo) போட்டுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

திருச்சி: திருச்சி சிந்தாமணி வென்ஸி தெருவைச் சேர்ந்த எஸ்.ஹரிஹரன் (25) என்பவர், மேல சிந்தாமணி பகுதியில் டாட்டூ சென்டர் நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு மும்பை சென்றுள்ளர். அங்கு, தனது நாக்கை இரண்டாக கிழித்தும், கண்களுக்கும் டாட்டூ (Tattoo) போட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ சிலவற்றையும் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், இதுபோன்று நீங்களும் செய்து கொள்ள வேண்டும் என்றால், தன்னைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவரிடம் டாட்டூ போட்டுக் கொண்டு இரண்டு பேர், இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தனர். பின்னர், இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. எனவே, மருத்துவக் கட்டுப்பாடுகளையும் மீறி, ஆபத்தான அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

Tattoos in Private part by Trichy Aliens emo studio

இந்த நிலையில், இதுகுறித்து ஸ்ரீரங்கம் சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன் புகார் ஒன்றை அளித்தார். இந்தப் புகாரின் பேரில், டாட்டூ சென்டர் நடத்தி வந்த ஹரிஹரன் மற்றும் அவரிடம் நாக்கைப் பிளந்து டாட்டூ குத்திக் கொண்டவரும், அவரது நண்பருமான திருவெறும்பூர் கூத்தைப்பாரையைச் சேர்ந்த வி.ஜெயராமன் ஆகியோரை கோட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதையும் படிங்க: “படையப்பா”படத்தில் சூரி…வெளிவந்த தகவல்…ஆச்சரியத்தில் கே.எஸ்.ரவிக்குமார்….!

மேலும் 17 வயது சிறுவனையும் எச்சரித்து போலீசார் அனுப்பினர். அது மட்டுமல்லாமல், டாட்டூ சென்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், உடலின் அந்தரங்க பாகங்களிலும் டாட்டூ போட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், இவ்வாறு அந்தரங்கப் பகுதிகளில் டாட்டூ போடுவதற்கு 30 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளதும், இதுவரை மூன்று பேருக்கு நாக்கு அறுவை சிகிச்சை செய்து டாட்டூ போட்டதும், இதன் மூலம் 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது வருகிறது.

  • Highest paid bodyguards in Bollywood கோடிகளை அள்ளும் சினிமா பிரபலங்களின் பாடிகார்ட்ஸ்…சம்பளத்தை கேட்டிங்கனா ஷாக் ஆவீங்க..!
  • Views: - 54

    0

    0

    Leave a Reply