விவாகரத்து நடிகைக்கு பண்ணை வீடு …பாசத்தை பொழிந்த தயாரிப்பாளர்…எங்கேயோ இடிக்குதே..!
Author: Selvan17 December 2024, 5:59 pm
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் விவாகரத்து நடிகை,பல வித சிக்கல்களில் சிக்கி வருகிறார்.ஆரம்பத்தில் பல ஸ்டார் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து,ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இந்நிலையில் பிரபல வாரிசு நடிகருடன் ஒன்றாக நடிக்கும் போது,இருவரும் காதலில் சிக்கி பின்பு வீட்டார் சம்மதத்துடன் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
நன்றாக போன திருமண வாழ்க்கையில்,திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு,விவாகரத்தை அறிவிச்சு ரசிகர்களை அதிர்ச்சியாக்கினார்கள்.
அதன் பின்பு தீராத நோயால் அவதிப்பட்டு வந்த விவாகரத்து நடிகை,தற்போது மெல்ல மெல்ல சரியாகி,மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.இந்நிலையில் விவாகரத்து நடிகை கஷ்டத்தில் இருக்கும் போது பிரபல தாயரிப்பாளர் ஒருவர் 25 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.
இதையும் படியுங்க: “படையப்பா”படத்தில் சூரி…வெளிவந்த தகவல்…ஆச்சரியத்தில் கே.எஸ்.ரவிக்குமார்….!
அதனைத்தொடர்ந்து தயாரிப்பாளரின் மகன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் விவாகரத்து நடிகையை நடிக்க கேட்டுள்ளார்.
அதற்கு அந்த நடிகையும் ஓகே சொன்னதால்,படத்தில் நடிப்பதற்கு கேட்ட பணத்தையும் கொடுத்து,தனக்கு சொந்தமான பண்ணைவீட்டையும் எழுதி கொடுத்துள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.இதனால் விவாகரத்து நடிகையை நெட்டிசன்கள் தற்போது விவாதித்து வருகின்றனர்.