குத்துப்பட்ட மருத்துவர் மீது வழக்கு பதியாதது ஏன்? ஐகோர்ட் சரமாரி கேள்வி!

Author: Hariharasudhan
18 December 2024, 9:54 am

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரைக் கத்தியால் குத்திய இளைஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.

சென்னை: சென்னை மாவட்டம், கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிகிச்சை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த நிலையில், இந்த மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக உள்ள பாலாஜியை, கடந்த நவம்பர் 13ஆம் தேதி பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (25) என்ற இளைஞர் கத்தியால் குத்தினார்.

இதில், மருத்துவரின் கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர் நலமானார். இதனிடையே, கத்தியால் குத்திய விக்னேஸ்வரன் மீது கொலை முயற்சி, பொது ஊழியரை தாக்கியது உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

MHC asked why not filed case against stabbed doctor to Police

இதனையடுத்து, விக்னேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விக்னேஷ் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: அந்தரங்க உறுப்பிலும் டாட்டூ? திருச்சி ஏலியன்ஸ் விசாரணையில் திடுக் தகவல்கள்!

அப்போது, போலீசார் தரப்பில், பணியில் இருந்த அரசு மருத்துவரைக் கத்தியால் குத்தியதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விக்னேஸ்வரன் தரப்பில், தன் தாயாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக மருத்துவர் செயல்பட்டாதால் ஆத்திரத்தில் குத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவர் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை? என போலீசாருக்கு கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, தினமும் வேலூர் சத்தூவாச்சாரி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என விக்னேஷ்-க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

  • Anirudh jailer 2 Salary Details தாறுமாறாக சம்பளம் கேட்கும் அனிருத்…அதிர்ச்சியில் ஜெயிலர் 2 படக்குழு…!
  • Views: - 53

    0

    0

    Leave a Reply