ஹேர் கலரிங் செய்யும் போது இந்த விஷயங்களை தப்பித்தவறி கூட மறந்துடாதீங்க!!!

Author: Hemalatha Ramkumar
18 December 2024, 10:42 am

இன்று பலர் தங்களுடைய தலைமுடியை தங்களுக்கு விருப்பமான நிறங்களோடு கலர் செய்து கொள்வதை நம்மால் பார்க்க முடிகிறது. முன்னதாக சலூனுக்கு மட்டுமே சென்று ஹேர் கலரிங் செய்ய வேண்டிய நிலை நீடித்தது. ஆனால் இப்பொழுது வீட்டில் இருந்தே ஹேர் கலரிங் செய்து கொள்ளும் வகையில் DIY கிட்டுகள் மார்க்கெட்டில் கிடைக்கிறது. ஹேர் கலரிங் செய்து கொள்வதற்கு எக்கச்சக்கமான நிறங்கள் மற்றும் பல்வேறு விதமான ப்ராடக்டுகள் கிடைக்கிறது.

ஆனால் வீட்டிலிருந்து நீங்கள் பயன்படுத்தும் இந்த கலரிங் கிட்டுகள் சௌகரியத்தை வழங்கும் அதே நேரத்தில் ஒரு சில அபாயங்களோடும் வருகின்றன. நீங்கள் செய்யும் சிறிய தவறு கூட உங்களுடைய தலைமுடிக்கு மீளமுடியாத சேதத்தை ஏற்படுத்தலாம். எனவே ஹேர் கலரிங் செய்யும் பொழுது நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில எளிமையான விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பேட்ச் சோதனை செய்து பார்ப்பது 

உங்களுடைய தலைமுடியை கலரிங் செய்வதற்கு முன்பு ஒரு பேட்ச் சோதனை செய்து பார்ப்பது அவசியம். இந்த எளிமையான விஷயத்தை செய்வது உங்களுடைய தலைமுடியை ஏதேனும் அலர்ஜி விளைவுகள், சென்சிடிவிட்டி அல்லது கலர் சமமில்லாமல் பரவுவது போன்ற பிரச்சனைகளை கண்டறிய உதவும். இதற்கு நீங்கள் அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து சிறிய அளவு டையை தடவ வேண்டும். ஒரு சில மணி நிமிடங்கள் காத்திருந்து உங்களுக்கு ஏதேனும் எரிச்சல், அரிப்பு அல்லது நிறமாற்றம் ஏற்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். மேலும் நீங்கள் தேர்ந்தெடுத்த நிறம் சரியாக வெளிப்படுகிறதா என்பதையும் சோதிப்பது அவசியம். ஏதேனும் எதிர்மறையான விளைவுகள் இருந்தால் உடனடியாக இந்த ப்ராடக்ட் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுக வேண்டும்.

தலைமுடியை சுற்றி இருக்கும் பகுதிகளை பாதுகாத்தல் 

ஹேர் கலரிங் செய்யும் பொழுது உங்களுடைய தலைமுடியை சுற்றி இருக்கும் பகுதிகளை பாதுகாப்பது மிகவும் அவசியம். இதற்கு நீங்கள் பேரியர் கிரீம் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுத்தலாம். எனவே ஹேர் கலர் செய்வதற்கு முன்பு உங்களுடைய நெற்றி, காதுகள் மற்றும் கழுத்து பகுதிகளில் இதனை தடவுவது தேவையில்லாத நிறமாற்றம் செய்யப்படுவதை தவிர்க்க உதவும். மேலும் இந்த சிறிய முன்னெச்சரிக்கையில் ஈடுபடுவது சுத்தம் செய்யும் உங்களுடைய வேலையை எளிதாக்கும்.

நேரத்தை கவனித்துக் கொள்ளுதல் 

உங்களுடைய தலைமுடிக்கு கலர் செய்யும்பொழுது நேரம் என்பது மிகவும் முக்கியம். டையை நீண்ட நேரத்திற்கு தலைமுடியில் விடுவதால் அது அளவுக்கு அதிகமாக பிராசஸ் செய்யப்பட்டு, சேதம், வறட்சி போன்றவை ஏற்படலாம். எனவே பாக்கெட்டில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நேரத்தை பின்பற்றுவது மிகவும் அவசியம்.

ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும் 

ஹேர் கலரிங் செய்வதற்கு முன்பு ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ஒரு சில நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். இவ்வாறு செய்வது உங்களுடைய தலைமுடியில் உள்ள இயற்கை எண்ணெய்கள் சேதத்தை குறைத்து, ஹேர் கலர் சிறந்த முறையில் உறிஞ்சப்படுவதை உறுதி செய்யும். அதே நேரத்தில் அழுக்கான தலைமுடி நிறத்தை சிறந்த முறையில் வெளிப்படுத்தும். இதனால் உங்களுக்கு நீண்ட நாட்களுக்கு ஹேர் கலர் நீடிக்கும். எனினும் இது அனைத்து வகையான தலைமுடிக்கும் பொருந்தாது. எனவே எந்த ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பு ஒரு நிபுணரை ஆலோசிப்பது அவசியம்.

  • Keerthy Suresh Quits Acting கண்டிஷன் போட்ட கணவன்.. கீர்த்தி சுரேஷ் எடுத்த விபரீத முடிவு!!
  • Views: - 57

    0

    0

    Leave a Reply