டோம் குரூஸ் சமீபத்தில் அமெரிக்க கடற்படை வழங்கும் உயரிய பொதுமக்கள் சேவை விருதான Distinguished Public Service Award விருதைப் பெற்றார். லண்டனில் நடைபெற்ற விழாவில் கருப்பு உடையில் மேடலுடன் நிற்கும் அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. விருதைப் பற்றிய பாராட்டுகளுக்கு மத்தியில், அவரது தோற்றம் தான் அதிக கவனத்தை ஈர்த்தது.
நடிகர் டோம் குரூஸின் முதுமை தோற்றம் வைரல்
டாப் கன், Born on the Fourth of July, Mission: Impossible போன்ற படங்களில் கடற்படையின் தியாகங்களை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. நெட்டிசன்கள், டோம் குரூஸின் புதிய புகைப்படங்களைப் பார்த்து, “இப்போது முதுமை தொடங்கியுள்ளது” என கருத்து தெரிவித்தனர்.
மேலும் படிக்க: விஜய் சேதுபதியின் அடுத்த சூப்பர் ஹிட்: மஹாராஜாவுக்குப் பிறகு என்ன?
இணையவாசிகளின் கருத்து
ஒருவர் பதிவில், “டோம் குரூஸ் முதுமை அடைந்துவிட்டார்” என்று குறிப்பிட்டார். சிலர் அவரது முகத்தில் வீக்கம் காணப்படுகிறது, இது சிகிச்சை காரணமாக இருக்கலாம் என தெரிவித்தனர்.
டோம் குரூஸ் அடுத்ததாக 2025 மே மாதத்தில் வெளியாகவுள்ள Mission Impossible: The Final Reckoning திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், அவரது அடுத்த படம் Deeper, ஓர் அமானுஷ்ய த்ரில்லர் படமாகும்.