‘உங்க வீட்டுல ஆம்பள இல்லையா?.. ’என் காலைப் பிடித்து கண்ணீர் விட்டார்கள்’.. பாமக எம்எல்ஏ அருள் விளக்கம்!

Author: Hariharasudhan
18 December 2024, 3:15 pm

சேலம் மேற்கு பாமக எம்எல்ஏ அருள் (PMK MLA Arul) பெண்களை இழிவாகப் பேசியதாக பரவிய வீடியோவிற்கு, விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த முத்துநாயக்கன்பட்டியில் கோயில் ஒன்று உள்ளது. . இந்தக் கோயிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்னை வந்த நிலையில், இரு தரப்பினரையும் அழைத்து, ஓமலூர் தாசில்தார் பல கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

ஆனால், இவை எதிலும் உடன்பாடு ஏற்படாததால் கோயில் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது. எனவே, இந்த பூட்டப்பட்ட கோயிலைத் திறப்பதற்கான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்று உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது, சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் சென்று உள்ளார்.

அப்போது ஒரு தரப்பில் இருந்து ஆண்களும், மற்றொரு தரப்பில் இருந்து பெண்களும் வந்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த பாமக எம்எல்ஏ அருள், “உங்க வீட்டுல ஆம்பள யாருமே இல்லையா? ஏன் வரல?” என இழிவாகப் பேசியுள்ளார். இதனைப் பார்த்த பெண்கள் கையெடுத்து அவரைக் கும்பிட்டுள்ளனர்.

இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில், அந்த வீடியோ வைரலாகி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இது குறித்து பாமக எம்எல்ஏ அருள் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கி உள்ளார்.

Salem West PMK MLA Arul viral video

அதில், “நான் பெண்களிடம் தவறாகப் பேசுவதாக ஒரு வீடியோ வந்துள்ளது. முத்துநாயக்கன்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் தங்களுக்குத்தான் சொந்தம் என தமிழ் பேசும் விஸ்வகர்மா சமூகத்தினரும், தெலுங்கு பேசும் விஸ்வகர்மா சமூகத்தவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர்.

இரு தரப்பினரிடமும் ஓமலூர் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கோயில் பூட்டப்பட்டு விட்டது. இந்த கோயில் மூடி இருக்கக்கூடாது என்ற அடிப்படையில், அந்தப் பகுதிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை அழைத்து, இரு தரப்பிலும் தலா பத்து பேரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என முடிவு செய்து, அதன்படி சென்றோம்.

இதையும் படிங்க: பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? ரகசியத்தை உடைத்த அதிமுக Ex.புள்ளி!

அதில் ஒரு பிரிவினர் பெண்களாகவும், ஒரு பிரிவினர் ஆண்களாகவும் அங்கு வந்திருந்தனர். நான் அந்தப் பெண்களிடம், அந்தக் கோயில் தொடர்பான தலைவரை வரச் சொன்னோம். இதோ வருகிறார்கள், வருகிறார்கள் என்றார்கள், ஆனால் வரவில்லை.

இதனிடையே, அந்த பெண்கள் என் காலைப் பிடித்துக்கொண்டு, “இந்த கோயிலைத் திறந்துவிடுங்கள்” என கண்ணீர் விட்டார்கள். எனக்கும் வேதனைதான். ஆனால், கோயில் சாவி என்னிடம் இல்லை. அரசு நிர்வாகம் பூட்டிச் சாவியை வைத்துள்ளது. இரு தரப்பினரும் ஒற்றுமையாக இருந்தால் தான் கோயிலைத் திறக்க முடியும்.

நான் எம்எல்ஏ என்ற அடிப்படையில் எல்லாம், சட்டத்தை கையில் எடுத்து கோயிலை திறக்க முடியாது எனப் பேசினேன். அவர்கள் என்னைப் பேசவே விடாமல் கோயிலை திறக்கச் சொல்லி கெஞ்சினார்கள். பொதுவான இடத்தில் உள்ள கோயிலில் நாங்களும் வழிபட உரிமை வேண்டும் என மற்றொரு பிரிவினர் கூறினார்கள்.

அதன் பிறகுதான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் வேண்டும் என்பதற்காக, அந்தப் பெண்களிடம், “உங்கள் தரப்பில் ஆண்களை வரச் சொல்லுங்கம்மா” என்பதை அழுத்தி அழுத்திச் சொன்னேன். அதுதான் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை அறிவுப்பூர்வமாக பேசித் தீர்த்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

  • Lokesh Kanagaraj Mr. Bharat movie ரஜினி பட பெயரை தட்டி தூக்கிய லோகேஷ்… வெளியானது அடுத்த படத்தின் PROMO!
  • Views: - 49

    0

    0

    Leave a Reply