கண்டிஷன் போட்ட கணவன்.. கீர்த்தி சுரேஷ் எடுத்த விபரீத முடிவு!!
Author: Udayachandran RadhaKrishnan18 December 2024, 5:07 pm
நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ் தெலுங்கில் கொடி கட்டி பறந்தார், தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழுக்கு சென்றார்.
இதையடுத்து தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்த அவருக்கு வரவேற்பு குவிந்து வருகிறது. ஒரே ஒரு படத்தில் நடித்துள்ள நிலையில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இதையும் படியுங்க: குடும்பத்துடன் ஹனிமூன்..குதூகலத்தில் பிரபல ஜோடி..வைரலாகும் புகைப்படம்..!
சினிமாவில் இருந்து விலக கீர்த்தி சுரேஷ் முடிவு
ஆனால் அதற்குள் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனியை மணமுடித்தார். கடந்த 12 ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் நடந்தது.
இந்த விழாவில் விஜய், திரிஷா, கல்யாணி பிரியதர்ஷன், அட்லீயின் மனைவி பிரியா, விஜய்யின் மேனேஜர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்குப் பிறகு நடிப்பை தொடர்வாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து விட்டது. தற்போது, புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதன்படி, திருமணத்துக்குப் பிறகு கீர்த்திக்கு நடிப்பை தொடர விருப்பம் இல்லை எனவும், பட தயாரிப்புகள் மற்றும் கணவர் ஆண்டனியின் தொழில்களை கவனிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது தெளிவாக இல்லை.