அமரன் திரைப்படத்திற்கு டப்பிங் கொடுத்த பிரபல ஹீரோக்கள்..வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த இயக்குனர்..!

Author: Selvan
18 December 2024, 7:17 pm

அமரன் பட டப்பிங்கில் பிரபல ஹீரோக்கள்

தமிழ் சினிமாவில் இந்த வருடம் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை அமரன் திரைப்படம் கண்டது.சிவகார்த்திகேயன் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமரன் திரைப்படம் அமைந்தது.

Amaran movie 300 crore milestone

மேஜர் முகுந்த் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படம் மக்களின் பாராட்டுக்களை வாரி குவித்தது.அதுமட்டுமல்லாமல் வசூலிலும் 300 கோடிக்கு மேல் சாதனை புரிந்தது.

இதன் மூலம் அடுத்தடுத்து பெரிய படங்களில் சிவகாத்திகேயன் பிஸியாக நடித்து வருகிறார்.சமீபத்தில் OTTயில் வெளியாகியும் ரசிகர்களை கவர்ந்தது.

இதையும் படியுங்க: வைரலாகும் MISS U ASH ஹேஷ்டேக்…”அஸ்வின்”ஒரு சிங்கம்…செல்வராகவன் போட்ட பதிவு..!

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டிருக்கும்.படத்தில் வில்லன் மற்றும் சிவகார்த்திகேயன் டீமில் நடித்த பலருக்கு டப்பிங் வேற வேற ஆட்கள் கொடுத்திருந்தனர்.

அந்த வகையில் வில்லனாக ஆசிஃப் வானியாக நடித்த ரோமன் ஷாவிற்கு நடிகர் கௌதம் கார்த்திக் தான் டப்பிங் பேசியுள்ளார்.ALTAF BABA கதாபாத்திரத்திற்கு நடிகர் ஹரிஷ் உத்தமன் டப்பிங் பேசியுள்ளார்.இவர்கள் இருவருக்கும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி டப்பிங் காட்சிகளை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

  • Lokesh Kanagaraj Mr. Bharat movie ரஜினி பட பெயரை தட்டி தூக்கிய லோகேஷ்… வெளியானது அடுத்த படத்தின் PROMO!
  • Views: - 33

    0

    0

    Leave a Reply