ரஜினி பட பெயரை தட்டி தூக்கிய லோகேஷ்… வெளியானது அடுத்த படத்தின் PROMO!

Author: Selvan
18 December 2024, 9:04 pm

லோகேஷ் தயாரிக்கும் Mr.பாரத் பட அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ்.இவர் தமிழில் வெளியான மாநகரம் படம் மூலம் அறிமுகம் ஆகி பின்பு கார்த்தி நடிப்பில் உருவான கைதி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

Lokesh Kanagaraj production G SQUAD nex movie

தன்னுடைய படத்தில் புதுவிதமான சண்டை காட்சிகளும்,ட்விஸ்ட்டும் வைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருபவர்.அடுத்தடுத்து மாஸ்டர்,விக்ரம்,லியோ என வெற்றிப்படங்களை குவித்து தவிர்க்க முடியாத இயக்குனராக இருக்கிறார்.

இதையும் படியுங்க: அமரன் திரைப்படத்திற்கு டப்பிங் கொடுத்த பிரபல ஹீரோக்கள்..வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த இயக்குனர்..!

இவர் தற்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனமான G SQUAD அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இப்படத்தை ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் சுதன் சுந்தரம் சேர்ந்து இயக்குகின்றனர்.படத்திற்கு Mr.பாரத் என்ற பெயர் வைத்துள்ளனர்.படத்தில் ஹீரோவாக யூடியூப் பிரபலமான பாரத் நடிக்கிறார்.

லோகேஷ் இயக்கும் படம் என்ற்றால் ஆக்ஷன்க்கு பஞ்சம் இருக்காது.ஆனால் அவர் தயாரிக்கும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது இப்படத்தின் PROMO வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 18

    0

    0

    Leave a Reply