சருமம் தங்கம் போல ஜொலிக்க ஆசையா… அப்போ இந்த பொருள் உங்களுக்கு அவசியம் தேவை!!!

Author: Hemalatha Ramkumar
19 December 2024, 2:29 pm

பளபளப்பான சருமத்தை பெறுவதற்கு நீங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பல்வேறு பொருட்களை பயன்படுத்தி பேஸ் பேக்குகளை முயற்சி செய்து பார்த்திருப்பீர்கள். ஆனால் எப்பொழுதும் வீட்டில் இருக்கும் பால் ஒன்றை வைத்து மட்டுமே நீங்கள் பள பளப்பான சருமத்தை பெறலாம் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். பாலில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் லாக்டிக் அமிலம் இருப்பதால் இது பொதுவான சரும பிரச்சனைகளுக்கு அற்புதமான ஒரு தீர்வாக அமைகிறது. பால் சருமத்தை மீட்டெடுத்து அதனை மென்மையாக மாற்றுகிறது. மேலும் பாலில் உள்ள போஷாக்குகள் சருமத்தின் pH அளவை சமநிலையாக்கி, வீக்கத்தை குறைத்து, கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.

இந்த எளிமையான பொருளை உங்களுடைய சரும பராமரிப்பு வழக்கத்தில் சேர்ப்பது உங்களுக்கு பளிச்சென்று, மினுமினுப்பான சருமத்தை பெற்று தரும். மேலும் உங்களுடைய வேலையும் மிகவும் எளிதாக முடிந்துவிடும். ஆரோக்கியமான மற்றும் என்றென்றும் மினுமினுப்பான சருமத்தை பெறுவதற்கு வீட்டில் இருந்தவாறு காய்ச்சாத பாலை வைத்து ஃபேஸ் பேக்குகள் எப்படி தயார் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

காய்ச்சாத பால் மற்றும் மஞ்சள்

2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பாலை ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடியோடு கலந்து ஒரு ஃபேஸ் பேக்கை தயார் செய்யுங்கள். இதனை உங்களுடைய முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவவும். கண் பகுதிகளை தவிர்த்து விடுங்கள். 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஓய்வெடுத்து பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும். இந்த பேக்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது முகப்பரு, ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் மெல்லிய கோடுகளை குறைத்து, பளபளப்பான சருமத்தை தருகிறது.

காய்ச்சாத பால் மற்றும் சந்தனம் 

2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பாலுடன் ஒரு டேபிள் ஸ்பூன் சந்தன பொடியை கலந்து போஷாக்கு மிகுந்த ஒரு ஃபேஸ் பேக்கை நீங்கள் தயார் செய்யலாம். இந்த பேஸ்ட்டை உங்களுடைய முகத்தில் தடவி 20 நிமிடங்கள் காத்திருந்து பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். இந்த ஃபேஸ் பேக் எரிச்சல் கொண்ட சருமத்தை ஆற்றி, சரும துளைகளை குறைத்து, உங்களுக்கு மினுமினுப்பான சருமத்தை தரும்.

காய்ச்சாத பால் மற்றும் தேன் 

இந்த ஃபேஸ் பேக்கை தயார் செய்வதற்கு நீங்கள் 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பாலை ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் கலக்க வேண்டும். இந்த நீரேற்றம் மிகுந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவுங்கள். பின்னர் முகத்தை 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். இது உங்களுக்கு பளிச்சென்ற முகத்தை கொடுக்கும்.

இதையும் படிச்சு பாருங்க: பரீட்சை நேரத்துல படிக்கும்போது தூக்கம் தூக்கமா வருதா… இந்த பிரச்சினையை ஈசியா சமாளிக்கலாம்!!!

காய்ச்சாத பால் மற்றும் வாழைப்பழம் 

நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தை மசித்து அதனை 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பாலோடு கலந்து பேஸ்டை தயார் செய்யவும். வாழைப்பழத்தை நீங்கள் தேவைப்பட்டால் மிக்ஸியில் கூட போட்டு அடித்து எடுத்துக் கொள்ளலாம். இதனை முகத்தில் தடவி 25 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவவும். இந்த பொட்டாசியம் மற்றும் வைட்டமின் நிறைந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, அதனை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.

காய்ச்சாத பால் மற்றும் கடலை மாவு 

2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பாலுடன் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவை கலந்து இந்த எக்ஸ்ஃபோலியேட்டிங் ஃபேஸ் பேக்கை நீங்கள் தயார் செய்யலாம். 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவுங்கள். இந்த பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி டேனை போக்கி, பளபளப்பான சருமத்தை அளிக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Director Shankar Dayal passes away “சகுனி” பட இயக்குனர் திடீர் உயிரிழப்பு…சோகத்தில் உறைந்த திரையுலகம்..!
  • Views: - 64

    0

    0

    Leave a Reply