குழந்தை பெற்றெடுத்த பள்ளி மாணவி.. கடலூரில் அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!
Author: Hariharasudhan19 December 2024, 3:17 pm
கடலூரில் பள்ளி மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த நிலையில், இது தொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மலர் செல்வம் என்பவர் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் கடந்த ஆண்டு பள்ளி ப்படிப்பை முடித்துச் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், அந்த மாணவி தற்போது சென்னையில் முதலாம் ஆண்டு கல்லூரி படித்து வருகிறார். இதனிடையே, கடந்த டிசம்பர் 15ஆம் தேதி வயிற்றுவலி காரணமாக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டு உள்ளார். அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் மருத்துவர்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து. இது தொடர்பாக விசாரிக்கையில். தன்னுடைய பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய மலர் செல்வம் என்பவர் தன்னை பலமுறை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியதாக அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார்.
அதேநேரம், இதுகுறித்து வெளியே கூறினால் செய்முறை பாடம் மதிப்பெண்ணில் கை வைத்து விடுவேன் எனவும் மிரட்டி, பலமுறை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை அளித்துள்ளார். இதனை அடுத்து வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த மலர் செல்வத்தை போலீசார் நேரடியாகச் சென்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ரகசிய மனைவியான நடிகையின் சகோதரி.. சிவாஜி மகன் செய்த சதி!
இதனை அடுத்து, காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதுபோல் வேறு ஏதும் மாணவிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளாரா என்பது குறித்தும் சேத்தியார்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.