’மிடில் கிளாஸ் மக்களே கிரெடிட் கார்டு வேண்டாம்’.. ஓட்டுநரின் திடீர் மரணம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!
Author: Hariharasudhan19 December 2024, 3:58 pm
சென்னையில் கிரெடிட் கார்டு பணம் செலுத்துவதில் ஏற்பட்ட அழுத்தத்தால் ஓட்டுநர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: சென்னையைச் சேர்ந்த 30 வயது நபர் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணாமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அவரது உடல் நல்லடக்கம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளது. இருப்பினும் இவர் இதனால் உயிரிழந்தார் என்பது உறவினர்கள் மத்தியில் கேள்விகளாகவே இருந்திருக்கிறது.
இந்த நிலையில், அவருடைய செல்போன் உறவினர்கள் கையில் கிடைத்துள்ளது. அதில் அவர் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில், “மிடில் கிளாஸ் மக்கள் கிரெடிட் கார்டு வாங்க வேண்டாம், அதனை நம்பவும் வேண்டாம். நான் மூன்று வங்கிகளில் கிரெடிட் கார்டு வாங்கி இருந்தேன்.
அதில் நான் பல லட்சம் ரூபாய் திரும்பச் செலுத்தியும், என்னை மீண்டும் மீண்டும் பணம் செலுத்தச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது. மற்றபடி அது உங்களுடைய விருப்பம், ஆனால் கிரெடிட் கார்டு வேண்டாம் என்பதே என்னுடைய கருத்து” எனக் கூறியிருந்தார்.
இந்த வீடியோ குடும்பத்தினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால், முதலில் உடலை அடக்கம் செய்யுங்கள், அதன் பிறகு இந்த வழக்கைப் பார்க்கலாம், இது போன்று தினமும் பத்து வழக்குகள் காவல் நிலையத்துக்கு வருகிறது என அலட்சியமாக பதில் கூறியதாக உயிரிழந்தவரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: வாழைப் பழம் கொடுத்து அமைச்சரிடம் அனுமதி பெற்றேன்.. திமுக எம்எல்ஏ பேச்சு!
அதேநேரம், குறிப்பிட்ட மூன்று வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் தானாகவே வந்து அவருக்கு கிடைத்ததாகவும், அவர் வேண்டாம் என்று கூறியும் வங்கி தரப்பில் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் கொடுக்கப்பட்ட லிமிட்டுக்கு மேலாக அவர் அதிகபட்சமாகவே பணம் செலுத்தியதாகவும் அவரது உறவினர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், 60 ஆயிரம் ரூபாய்க்கு மூன்று லட்சம் ரூபாய் வரையிலும், ஒரு லட்சம் ரூபாய்க்கு 4 லட்சம் ரூபாய் வரை திருப்பிச் செலுத்திய பின்பும் மீண்டும் மீண்டும் பணத்தை கட்டச் சொல்லி வற்புறுத்தியது, அவரது மனதை ஆழமாக பாதித்துள்ளதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவ்வாறு கிரெடிட் கார்டு மூலம் ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.