தூக்கிவிட்டவரை தூக்கி வீசிய விக்ரம்…இயக்குனர் பாலாவுடன் இப்படி ஒரு பகையா..!
Author: Selvan19 December 2024, 4:58 pm
விக்ரம்-பாலா உறவின் சிக்கல்
இயக்குனர் பாலா தற்போது அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை எடுத்து முடித்துள்ளார்.இப்படம் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆவதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில்,படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதுமட்டுமல்லாமல் இயக்குனர் பாலா திரையுலகில் 25 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் நிகழ்வும் நடந்தது.இதில் பல ஹீரோக்கள்,திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு,பாலாவுடன் இருந்த நாட்களை பகிர்ந்து,அவருக்கு வாழ்த்துக்களை கூறினார்கள்.
இந்த சூழலில் நடிகர் விக்ரம் இந்த விழாவிற்கு வருகை தராதது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.விக்ரம் நடிப்பில் வெளிவந்த சேது படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனார் பாலா. விக்ரமுடைய சினிமா வாழ்க்கையில் சேது படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இதையும் படியுங்க: கழுத்தில் தாலியுடன் மேடையில் கவர்ச்சி…சுண்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷ்…வைரலாகும் புகைப்படம்…!
இப்படத்திற்கு பிறகு ரசிகர்களால் “சியான் விக்ரம்” என்று அழைக்கப்பட்டார்.அதன் பின்பு பாலா விக்ரம்,சூர்யாவை வைத்து பிதாமகன் படத்தை இயக்கினார்.இதுவும் விக்ரம் கெரியரில் அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.

இப்படி விக்ரமின் அசுர வளர்ச்சிக்கு விதை போட்ட பாலாவை தொடர்ந்து ஒதுக்கும் காரணத்தை செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.
அதாவது விக்ரமின் மகன் துருவை வைத்து இயக்குனர் பாலா வர்மா படத்தை இயக்கினார்,படத்தின் பிரிவியூ பார்க்கும் போது படம் விக்ரமிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.இதனால் பாதியிலே கிளம்பி போயிருக்கிறார்.இதனால் கோவம் ஆன பாலா பாதியிலே எழுந்து சென்று என்னை கேவலப்படுத்துகிறாயா என்று சண்டை போட்டதாகவும்,அதன்பின்பு இருவரும் பேசுவதை தவிர்த்ததாகவும் கூறியிருப்பார்
என்ன தான் சண்டை இருந்தாலும்,பாலாவின் 25 வது வெற்றி விழாவில் கலந்திருக்கவேண்டும்,இப்படி நன்றி மறந்து இருக்க கூடாது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.