வாழைப் பழம் கொடுத்து அமைச்சரிடம் அனுமதி பெற்றேன்.. திமுக எம்எல்ஏ பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2024, 3:38 pm

அமைச்சர் ரகுபதியிடம் சிறுமலை வாழைப்பழம் வாங்கி கொடுத்து தான் குஜிலியம்பாறை நீதிமன்றம் அமைக்க அனுமதி பெற்றேன் என்று வேடசந்தூர் எம்.எல்.ஏ காந்திராஜன் பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா கரிக்காலி பிரிவில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் தொடங்கி வைத்தார்.

இதையும் படியுங்க: பாஜகவினரை ஓட ஓட விரட்டி கைது செய்த போலீசார்… தூத்துக்குடியில் பரபரப்பு..!!!

அதனைத் தொடர்ந்து எம்எல்ஏ காந்தி ராஜன் பேசியபோது, தமிழகத்திலேயே இந்த ஆண்டு குஜிலியம்பாறை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு புதிய நீதிமன்றங்களுக்கு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நான் உயர் நீதிமன்ற பதிவாளரை 2 முறை பார்த்து குஜிலியம்பாறைக்கு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று கேட்டபோது, தமிழகத்தில் 78 ஊர்களுக்கு நீதிமன்றம் தேவைப்படுகிறது, அதில் குஜிலியம்பாறை போன்ற சின்ன ஊருக்கு தர முடியாது என்று கூறினார்.

Dmk Mla Talk Jokingly About Minister

அதனைத்தொடர்ந்து அமைச்சர் ரகுபதியிடம் திண்டுக்கல் சிறுமலை வாழைப்பழம் வாங்கி கொடுத்து, நடையாய் நடந்து, பட்டு வேஷ்டியை போட்டு எங்களால் முடிந்த காரியங்களை எல்லாம் செய்துதான் நீதிமன்றத்திற்கு அனுமதி வாங்கினோம் என்று பேசினார். இந்த சம்பவம் விழா மேடையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…