விடுதலை 2 ரிலீஸ்.. கடைசி நேரத்தில் வெற்றிமாறன் கொடுத்த ஷாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2024, 5:31 pm

வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளியாக உள்ளது.

சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உட்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இளையாராஜா இசையமைத்துள்ளார்.

8 நிமிட காட்சிகள் படத்தில் இருந்து நீக்கம்

ஏற்கனவே இந்த படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் கெட்ட வார்த்தை அதிகமாக உள்ளதாக தணிக்கைக் குழு கூறியது.

இதையும் படியுங்க: விஜய் சேதுபதிக்கு லக் அடிக்க காரணமே அவங்கதான்.. பிரபலம் சொன்ன உண்மை!.

இந்த நிலையில் நாளை பட ரீலீஸ் சமயத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இன்று ரிலீஸ் செய்த ஒரு வீடியோ ரசிகர்களை ஷாக் அடைய செய்துள்ளது.

அந்த வீடியோவில், விடுதலை 2 படத்தின் படத்தின் நீளம் சற்று குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 8 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Big Changes in Viduthalai Part 2

மேலும், விடுதலை 2, இது ஒரு பெரிய பயணம். அனைவரும் இதில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். அனைவருக்கும் நன்றி. இது ஒரு படமாக எப்படி வந்துள்ளது என படம் பார்ப்பவர்கள் தான் சொல்ல வேண்டும். ஆனால், ஒரு அனுபவமாக நாங்கள் இதில் நிறைய கற்றுக்கொண்டோம் என கூறியுள்ளார்.

  • Mersal Film is Flop or hit Says Producer Hema Rukmani மெர்சல் படம் தோல்வியா? தயாரிப்பாளர் கொடுத்த ஷாக் பதில் : வெளியான வீடியோ!