வயிறும் நிரம்பும், வெயிட் லாஸும் நடக்கும்… ஒரே கல்லில் இரண்டு மாங்காய்னா இது தானா…??? 

Author: Hemalatha Ramkumar
19 December 2024, 6:18 pm

உடல் எடையை குறைக்கும் பயணத்தில் இருப்பவர்கள் குறிப்பாக தங்களுடைய உணவுகளில் கவனம் செலுத்த ஆலோசிக்கப்படுகிறது. பசியோடு இருக்கும் போது பதப்படுத்தப்பட்ட அதிக கலோரி நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் வயிறு நிரம்பிய உணர்வைத் தரக்கூடிய உணவுகளை சாப்பிடுவது உங்களுடைய உடல் எடை இழப்பு பயணத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த உணவுகளில் நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இருப்பதால் இது உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது.

முழு, பதப்படுத்தப்படாத உணவுகளில் கவனம் செலுத்துவதன் மூலமாக நீங்கள் பசியை கட்டுப்படுத்தி, வயிறு நிரம்பிய உணர்வை பெறலாம். சரியான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவதன் மூலமாக உங்களுடைய உடல் எடை குறைப்பு திட்டத்தை மேம்படுத்தலாம். இந்த மாதிரியான அணுகுமுறை உடல் எடையை குறைப்பதற்கு உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவும். அந்த வகையில் உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, உடல் எடையை குறைப்பதற்கு உதவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்.

பன்னீர் 

பன்னீர் என்பது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, உடல் எடையை குறைப்பதற்கு உதவும் ஒரு அற்புதமான உணவு. அதிக புரோட்டீன், அதே நேரத்தில் குறைவான கலோரிகள் கொண்ட பன்னீர் உங்களை நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வோடு வைத்து ஆரோக்கியமற்ற தின்பண்டங்கள் சாப்பிடுவதில் இருந்து உங்களை தள்ளி வைக்கும். கேசின் புரோட்டீன் நிறைந்த பன்னீர் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் கொழுப்பு எரிக்கப்படுவதை ஊக்குவிக்கும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு

நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு உங்களை நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வோடு வைக்கும். இதனால் நீங்கள் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை சாப்பிட மாட்டீர்கள். அதிக நீர்ச்சத்து மற்றும் குறைவான கலோரிகள் கொண்ட இது உங்களுக்கு வயிற்றில் திருப்தியை தருகிறது. ஆகவே இது உங்களுடைய உடல் எடை குறைப்பு டயட்டில் அற்புதமான ஒரு கூடுதலாக அமைகிறது.

ஓட்ஸ் 

அதிக நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் நிறைந்த ஓட்ஸ் உங்களை வயிறு நிரம்பிய உணர்வோடு வைக்கிறது. மெதுவாக செரிமானமாகும் கார்போஹைட்ரேட்டுகள் உங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்கி, காலை நேரத்திற்கும் மதிய நேரத்திற்கும் இடையில் ஏற்படும் பசியை கட்டுப்படுத்துகிறது. மேலும் ஓட்ஸ் பசியை பூர்த்தி செய்து மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடை குறைப்பு பயணத்தை விரைவுப்படுத்துகிறது.

இதையும் படிச்சு பாருங்க:  எல்லாரும் சொல்றாங்களேன்னு உங்க பாட்டுக்கு சியா விதைகளை சாப்பிட்டுறாதீங்க… அதுக்குன்னு சில ரூல்ஸ் இருக்கு!!!

சூப் வகைகள் 

குறைந்த கலோரி கொண்ட சூப் வகைகள் வயிற்றுக்கு நிரம்பிய உணர்வைத் தந்து உடல் எடை குறைப்பதற்கும் உதவுகிறது. ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பீன்ஸ் அல்லது அசைவ சூப் வகைகள் உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை தரும். குறைந்த கலோரிகள் கொண்ட இது உங்களுடைய உடல் எடை குறைப்பு உணவுக்கு ஏற்றது.

கினோவா 

கினோமா என்பது வயிறு நிரம்பிய உணர்வை தரக்கூடிய அற்புதமான ஒரு உணவு. அதிக புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த கினோவா பசியை கட்டுப்படுத்துகிறது. ஊட்டச்சத்து நிறைந்த இந்த உணவு மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் கொழுப்பு எரிக்கும் செயல்முறையை மேம்படுத்துகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!