யாரும் கிட்ட வந்துறாதீங்க…நாளுக்கு நாள் எகிறும் புஷ்பா 2 வசூல் வேட்டை…!

Author: Selvan
19 December 2024, 9:21 pm

பாகுபலி சாதனையை முறியடிக்க போகும் புஷ்பா 2

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

Allu Arjun Bollywood success

திரையரங்குகளில் 14 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில்,தற்போது வரை 1508 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.

குறிப்பாக இந்தி மொழியில் மட்டுமே 618 கோடியை வசூலித்துள்ளதால், இந்த படம் பாலிவுட்டில் 2வது மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது.தமிழகத்தில் 60 கோடியை தாண்டியுள்ளது.

இதையும் படியுங்க: அஜித் பாணியில் அட்லீ செய்த நெகிழ்ச்சியான செயல்…குவியும் பாராட்டுக்கள்..!

புஷ்பா 2 திரைப்படம்,பாகுபலி 2 படத்தின் மொத்த வசூலான 1800 கோடியை விரைவில் முறியடிக்கும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லு அர்ஜுன் மிகப்பெரிய மைல்கல்லான 2000 கோடி வசூலை விரைவில் எட்ட உள்ளார்.இதனால் இந்திய சினிமாவில் மிகப்பெரிய சாதனையாக புஷ்பா 2 தன்னுடைய கால் தடத்தை பதிக்க உள்ளது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?