தியேட்டரை விட்டு வெளியே போங்க.. படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஷாக்..!!
Author: Udayachandran RadhaKrishnan20 December 2024, 11:28 am
இன்று சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக விடுதலை2, முஃபாசா, Ui ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக விடுதலை 2 படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது. விடுதலை முதல் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால், அடுத்த பாகத்துக்காக காத்திருந்தனர்.
Ui படத்தை பார்க்க வந்தவர்களுக்கு ஷாக்
அந்த வகையில் காத்திருந்ததற்கு பலனாக் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்னொரு பக்கம் உபேந்திரா நடித்து இயக்கியுள்ள கன்னட மொழிப் படமான Ui படமும் வெளியானது.
இதையும் படியுங்க: விடுதலை 2 படம் எப்படி இருக்கு…? புரட்சிரகமான 40 நிமிடம் : X தள விமர்சனம்!!
பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படத்தில் படம் ஆரம்பித்த உடனே போடப்பட்ட கார்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
எப்போதும் வித்தியாசமான படமாக எடுக்கும் உபேந்திரா இந்த படத்தில் தனித்துவமான ஒரு கேப்ஷனை போட்டுள்ளது ரசிகர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது.
அதாவது, நீங்கள் புத்திசாலியாக இருந்தால் தியேட்டரை விட்டு வெளியேறுங்கள் என படம் ஆரம்பிக்கும் போது, இந்த வசனத்தை போட்டுள்ளனர்.
இதை X தளத்தில் பதிவிட்ட ரசிகர்கள், உபேந்திரா எப்போதுமே Unique என்றும், வித்தியாசமாக படமெடுப்பவர் என பாராட்டியும், ஒரு சிலர் எதிராகவும் விமர்சித்து வருகின்றனர்.