முருகனுக்கு காணிக்கையாக வந்த ஐபோன்… அரோகரா கோஷத்துக்கு பதில் கோவிந்தா போட்ட பக்தர்!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2024, 12:06 pm

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகுஸ்ரீ கந்தசாமி திருக்கோவில் கடந்த ஆறு மாதங்களுக்கு பின்பு இன்று உண்டியல் திறந்து காணிக்கை என்னபட்டது

இதில் பக்தர்கள் தாலி, கண்மலர்,வேல்,பண முடிப்பு சில்லறை நாணயங்கள் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் என உண்டியலில் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப நிரப்பி வைத்திருந்தனர்

இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி EO குமரவேல் ஆய்வாளர் பாஸ்கரன் முன்னிலையில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது.

இதில் 52 லட்ச ரூபாயும் 289 கிராம் தங்கமும் 6920 கிராம் வெள்ளியும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தனர்

இதையும் படியுங்க: நெல்லை கோர்ட் வாசலில் இளைஞர் கோர கொலை.. 3 தனிப்படைகள் அமைப்பு!

இதில் வியக்கத்தக்க வகையில் தவறவிட்ட ஒரு செல்போனும் கிடைக்கப்பெற்றுள்ளது. அது யாருடைய செல்போன் என்று ஆய்வு மேற்கொண்டதில் சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ், சென்னை சிஎம்டிஏ நிர்வாகத்தில் பணி செய்பவரின் செல்போன் என தெரியவந்துள்ளது.

Hundiyal Counting

இதனை அடுத்து அவருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவரும் உண்டியல் என்னும் இடத்திற்கு வந்து செல்போனை பெற முயன்ற போது கோவில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது உங்களுக்கு செல்போன் கொடுக்க முடியாது. வேண்டுமென்றால் உங்களுடைய தரவுகள் ஏதேனும் செல்போனில் உண்டு என்றால் அவற்றை மட்டும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

IPhone gift to Murugan

குடும்பத்திருடன் செல்போனை பெற்றுக் கொள்ளலாம் என வந்தவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஏற்கனவே இவர் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மனு அளித்து எனது செல்போனை மீட்டுக் கொடுக்கும்படி கேட்டுள்ளனர் நிர்வாகத்தினர் நிர்வாக ரீதியான முறைப்படி நீங்கள் அங்கு மனு அளித்து மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்ததன் பெயரில் அவர் திரும்பி சென்றார்

  • Soori speech Viduthalai 2 அவன கொஞ்சம் நிறுத்த சொல்லுங்கடா…ரசிகர்கள் கோஷத்தால் கதி கலங்கிய சூரி..!
  • Views: - 61

    0

    0

    Leave a Reply