கீர்த்தி சுரேஷை மிரட்டிய பிரபல நடிகை…திருமணத்தால் வந்த வினை…!
Author: Selvan20 December 2024, 12:54 pm
தோழி கல்யாணியின் இன்ஸ்டா பதிவு
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் சில தினங்களுக்கு முன்பு கோவாவில் பிரமாண்டமாக நடைப்பெற்றது.இவர் தன்னுடைய நண்பரான தொழிலதிபர் ஆண்டனி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இவர்களின் திருமணத்துக்கு விஜய்,திரிஷா உட்பட பல சினிமா பிரபலங்கள் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்.அந்த வகையில் இவருடைய நெருங்கிய தோழியான நடிகை கல்யாணி பிரியதர்சன் கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு நேரில் சென்றார்.
அங்கு அவர்,தன்னுடைய சக நண்பர்களான அட்லீ மனைவி பிரியா,ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ஆகியோருடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கீர்த்தி சுரேஷின் திருமணத்துக்கு வாழ்த்துக்களை கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையும் படியுங்க: தியேட்டரை விட்டு வெளியே போங்க.. படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஷாக்..!!
அதாவது,உங்களது திருமணம் உங்களுடைய காதலை போல் அழகாக உள்ளது.உங்களை பார்க்கும் போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது என கூறி, “உங்களுடைய திருமணத்தை பார்த்து நான் அழும் புகைப்படத்தை ரிலீஸ் செய்தால் உங்களை கொன்றுவிடுவேன்”என்று அன்பு கட்டளை விடுத்துள்ளார்.
இந்த பதிவை அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து,கீர்த்தியுடன் இருக்கின்ற நட்பை வெளிப்படுத்தியுள்ளார்.