’என் மருமகள் எங்கனே தெரியல..’ தஞ்சை தனியார் மருத்துவமனையில் நடந்த அவலம்!
Author: Hariharasudhan20 December 2024, 12:46 pm
தஞ்சை, பட்டுக்கோட்டை தனியார் மருத்துவனையின் தவறான சிகிச்சையால் தாயும், சேயும் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி சந்தியா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து உள்ளார். இதனால், பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், சந்தியாக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, சந்தியாக்கு இறந்தே குழந்தை பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். அதேநேரம், சந்தியாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறிய தனியார் மருத்துவமனை தரப்பினர், தஞ்சையில் உள்ள வேறு ஒரு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்து உள்ளனர்.
ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலே சந்தியா உயிரிழந்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனை முன்பு, சந்தியாவின் சடலத்தை ஆம்புலன்ஸில் வைத்து மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து அங்கு கதறி அழுதனர்.
அது மட்டுமல்லாமல், பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகிலும் 100க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பெரும் பதற்றம் நிலவியது. மேலும், இருவரின் இறப்பிற்கும் மருத்துவமனையின் அலட்சியமே காரணம் எனக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:
ஆனால், இறந்த பின்பு கொண்டு வந்த சந்தியாவின் உடலை தங்களுக்குத் தெரியப்படுத்தாமலே எங்கு கொண்டு சென்றனர் என்றே தெரியவில்லை என்றும், இறந்து பிறந்ததாகக் கூறும் குழந்தையைக் கூட எங்கள் கண்களில் இதுவரை காட்டவில்லை என்றும், சந்தியாவின் மாமனார் செய்தியாளர்களிடம் கூறினார்.