பார்சலில் வந்த அழுகிய ஆண் சடலம்… விசாரணையில் திக்.. திக்..!!
Author: Udayachandran RadhaKrishnan20 December 2024, 12:51 pm
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் உண்டி மண்டலம் யாண்டகண்டியில் துளசி என்ற ஜெகனன்னா காலனியில் அரசு ஒதுக்கிய இடத்தில் வீடு கட்டி வருகிறார்.
ராஜமுந்திரி சத்ரிய பரிஷத் அமைப்பாளர்கள் துளசி கட்டும் வீட்டிற்கு பொருட்களை சப்ளை செய்கிறார்கள். இந்நிலையில் ஏற்கனவே வீட்டிற்கு உண்டான டைல்ஸ் வந்த நிலையில் நேற்று மாலை துளசி வீட்டிற்கு ஆட்டோ டிரைவர் ஒருவர் வீட்டிற்கு உண்டான மின்சார உபகரணங்கள் பார்சல் வந்துள்ளதாக துளசிக்கு போன் செய்து கூறினார்.
இதையும் படியுங்க: முருகனுக்கு காணிக்கையாக வந்த ஐபோன்… அரோகரா கோஷத்துக்கு பதில் கோவிந்தா போட்ட பக்தர்!
உடனடியாக துளசி மின்சார உபகரணங்கள் இருந்ததாக பார்சலை கொண்டு வந்த நபர் கொடுத்துவிட்டுச் சென்றார். இந்நிலையில் இன்று காலை துளசி பார்சலை திறந்த பார்த்தபோது அழுகிய பிணத்தை பார்த்த துளசிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரையும் அழைத்துக் காண்பித்தார்.
உடனடியாக போலீசாருக்கு அழுகிய சடலம் அடங்கிய பார்சல் குறித்து தகவல் தெரிவித்தனர். உடனடியாக எஸ்.பி. நயீம் ஆஸ்மி தலைமையிலான போலீசார் அங்கு வந்து என்ன நடந்தது என்று விசாரித்து வருகின்றனர்.
மேலும் பார்சல் கொடுத்தது யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இறந்தவரின் உடல் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பார்சலில் சடலம் வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.