’என் ஃபிரண்ட் இப்படித்தான் இருந்தான்.. ஆனா இப்போ ஓஹோ..’ 11 மாதங்களாக தேடிவந்த ஜோதிடர் கைது!

Author: Hariharasudhan
20 December 2024, 1:29 pm

பெட்ரோல் பங்க் வைத்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக் கூறி 50 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றிய ஜோதிடரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

சென்னை: சென்னை வேளச்சேரி அடுத்த கருமாரியம்மன் நகர் விரிவு, பவானி தெருவைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் – கவிதா தம்பதி. இவர்கள் பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம், ஜாதகம் பார்ப்பதற்காக வல்லாஞ்சேரியைச் சேர்ந்த ஜோதிடர் வெங்கட சுரேஷ் என்பவர் வீட்டிற்குச் சென்று உள்ளனர்.

அப்போது, ‘உங்களுக்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது. நீங்கள் இருவரும் சேர்ந்து தொழில் செய்தால் அதிக லாபம் பார்க்கலாம்’ எனக் கூறி உள்ளார். இதனையடுத்து, என்ன தொழில் செய்தால் லாபம் வரும் என தம்பதி கேட்டுள்ளனர். இதற்கு, தனது நண்பர் ஒருவருக்கு 2020ஆம் ஆண்டு, பெட்ரோல் பங்க் தொடங்குவதற்கு உரிமம் வாங்கிக் கொடுத்தேன்.

அவருக்கு தற்போது தொழில் நல்ல லாபமாக சென்று கொண்டிருக்கிறது, அவர்கள் வசதியாகவும் வாழ்ந்து வருகின்றனர், உங்களிடம் காலியிடம் இருந்தால் நீங்களும் பெட்ரோல் பங்க் தொடங்கலாம், மேலும் அதற்கான உரிமத்தையும் நானே வாங்கித் தருகிறேன் என ஜோதிடர் கூறி உள்ளார்.

Astrologist arrested in chennai for money fraud to IT couple

அப்போது, தங்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தின் வேட்டவலம் பகுதியில் 65 சென்ட் இடம் இருப்பதாக கூறி உள்ளனர். இதனையடுத்து, திருமுடிவாக்கத்தில் உள்ள விஜயபாஸ்கர் என்பவர் வீட்டிற்கு ஜோதிடர் தம்பதியை அழைத்துச் சென்று உள்ளார். அப்போது இவருடைய தந்தை, டெல்லியில் ‘ரா’ பிரிவில் பணிபுரிகிறார் எனவும், அதனால் அவருக்கு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் எல்லாம் தெரியும் என்றும் கூறியுள்ளார்.

எனவே, 85 லட்சம் ரூபாய் கொடுத்தால் உங்களுக்கும் பெட்ரோல் பங்க் வைக்க உடனடியாக லைசென்ஸ் வாங்கித் தருவார் எனவும் அவர் கூறியுள்ளார். இதனை நம்பிய தம்பதி, அவர்களது கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் முன்பணமாக 50 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: பார்சலில் வந்த அழுகிய ஆண் சடலம்… விசாரணையில் திக்.. திக்..!!

ஆனால், பணம் கொடுத்து இரண்டு வருடங்கள் கடந்தும் பெட்ரோல் பங்க் வைக்க உரிமம் பெற்றுத் தராமல் இருவரும் ஏமாற்றி வந்துள்ளனர். அது மட்டுமல்லாமல், செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோதும் முறையான பதில் அளிக்காமல் இருந்து உள்ளனர். மேலும், நேரில் சென்று கேட்டால் அடியாட்களை வைத்துக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனால், ஜோதிடர் வெங்கட சுரேஷ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நடப்பாண்டு ஜனவரியில் வேளச்சேரி காவல் நிலையத்தில் கவிதா புகார் அளித்து உள்ளார். ஆனால், இது குறித்து அறிந்த இருவரும் தலைமறைவாகி உள்ளனர். பின்னர் தனிப்படை கடந்த 11 மாதமாக தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் ஜோதிடர் வெங்கட சுரஷை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

  • Soori speech Viduthalai 2 அவன கொஞ்சம் நிறுத்த சொல்லுங்கடா…ரசிகர்கள் கோஷத்தால் கதி கலங்கிய சூரி..!
  • Views: - 54

    0

    0

    Leave a Reply