காஞ்சனா 4ல் தளபதி விஜய்? சஸ்பென்ஸ் வைக்கும் லாரன்ஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan20 December 2024, 1:46 pm
நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது நடிகராக கைவசம் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் இவர் இயக்கிய காஞ்சனா படம் பெரும் வரவேற்பை பெற்றது.
காஞ்சனா 4 படத்தில் விஜய்?
இதனால் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை இயக்கி வரும் லாரன்ஸ், தற்போது 4வது பாகத்தை எடுத்து வருகிறார்.
இதையும் படியுங்க: தியேட்டரை விட்டு வெளியே போங்க.. படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஷாக்..!!
இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதை தவிர நடிகர் விஜய்யை கேமியோ ரோலில் நடிக்க வைக்க லாரன்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, இருவரும் திருமலை படத்தல் தாம்தக்க பாடலில் நடனமாடியிருப்பர். தற்போது அவர் காஞ்சனா 4 படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.