முதல்முறையாக களத்தில் எதிர்ப்பு குரல் தெரிவித்த தவெக.. தமிழக அரசு உத்தரவாதம்!

Author: Hariharasudhan
20 December 2024, 3:15 pm

சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

சென்னை: சென்னை அடுத்த எண்ணூரில், கடந்த 2017ஆம் ஆண்டு தனது முழு ஆயுட்காலத்தை எட்டியதால் 450 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் மூடப்பட்டது. இந்த நிலையில், இந்த எண்ணூர் அனல் மின் நிலையத்தை 660 மெகாவாட் திறன் கொண்ட வகையில் விரிவாக்கம் செய்வதற்கான திட்டத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முன்னெடுத்து உள்ளது.

இந்த நிலையில், இன்று (டிச.20) கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பிலும், அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக, சீமான், “வேலைவாய்ப்பு, ஊதியம் தான் முக்கியம் எனக் கூறி, அனல் மின் நிலையத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், உங்கள் வீட்டை அதன் அருகில் கட்டிக் கொள்ளுங்கள். இது நடக்காது, நடக்காது, நடக்காது. நான் உயிரோடு இருக்கும் வரை விடமாட்டேன்” எனத் தெரிவித்து உள்ளார்.

Why Ennore Thermal Power plant expansion

அதேபோல், “வட சென்னைக்கு உட்பட்ட எண்ணூர் பகுதியில் 660 மெகா திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை விரிவாக்கம் செய்யக் கூடாது. மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், மீனவர்கள் பாதுகாக்கப்படவும் கூடுதல் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்” என வடசென்னை தவெக இளைஞர் அணித் தலைவர் எம்.எல்.பிரபு கூறியுள்ளார்.

இதையும் படிங்க: காலைக்கடன் கழிக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. ஓசூரில் சோகம்!

இதனிடையே, தமிழ்நாடு மின் கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்ய எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம் உதவும் எனக் கூறியுள்ள தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

  • Ajith Kumar Vidamuyarchi movie விடாமுயற்சி படத்தில் ட்விஸ்ட்…அஜித்துடன் இணைந்த பிரபல நடிகை..படக்குழு வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!
  • Views: - 58

    0

    0

    Leave a Reply