உங்க தலைமுடி எப்படி தடிசா வளர்ந்துச்சுன்னு யாராவது கேட்டா இந்த ரகசியத்தை அவங்ககூட ஷேர் பண்ணுங்க!!!
Author: Hemalatha Ramkumar20 December 2024, 5:22 pm
லாவண்டர் எண்ணெய் மயிர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, pH அளவுகளை சமநிலை செய்து, மயிர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலமாக தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. எனவே இந்த பதிவில் லாவண்டர் எண்ணெயை தலைமுடி வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
மசாஜ்
லாவண்டர் எண்ணெயை தேங்காய் எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெயோடு கலந்து நேரடியாக மயிர்க்கால்களில் தடவி மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
ஹேர் மாஸ்க்
லாவண்டர் எண்ணெய்யோடு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து தலைமுடி மற்றும் மயிர்க்கால்களில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து, தலைமுடியை அலசினால் வலிமையான மற்றும் ஆரோக்கியமான தலைமுடியை பெறலாம்.
ஷாம்பூ
நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்புவோடு ஒரு சில துளிகள் லாவண்டர் எண்ணெயை பயன்படுத்துவது உங்களுடைய மயிர்க்கால்களை தூண்டி, தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
தலை முடியை அலசுவதற்கு
லாவண்டர் எண்ணெயை தண்ணீரில் கலந்து ஷாம்பு பயன்படுத்திய பிறகு இறுதியாக தலைமுடியை அலசுவதற்கு இந்த தண்ணீரை நீங்கள் பயன்படுத்தி வர தலைமுடியின் வளர்ச்சி அதிகரித்து அதற்கு இயற்கையான பளபளப்பு கிடைக்கும்.
இதையும் படிச்சு பாருங்க: உங்களோட குழந்தை உங்க மேல அதிக லவ்வோடு இருக்க நீங்க செய்ய வேண்டிய சின்ன சின்ன விஷயங்கள்!!!
மிஸ்ட்
லாவண்டர் எண்ணெயோடு சிறிதளவு தண்ணீர் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலைமுடி மற்றும் மயிர்க்கால்களில் மிஸ்ட் ஆக பயன்படுத்தினால் தலை முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
எண்ணெய் சிகிச்சை
லாவண்டர் எண்ணெய் மற்றும் கேரியர் எண்ணெயை சூடாக்கி வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது அதனை உங்களுடைய மயிர்க்கால்களில் தடவினால் மயிர்க்கால்களுக்கு தேவையான போஷாக்கு கிடைத்து முடி வளர்ச்சி அதிகமாகும்.
பொடுகு பிரச்சனை
லாவண்டர் எண்ணெய் பொடுகை எதிர்த்து போராடுவதற்கு உதவுகிறது. தலைமுடி வளர்ச்சிக்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கு இதனை நீங்கள் மயிர்க்கால்களில் மசாஜ் செய்ய வேண்டும்.
சீரம்
லாவண்டர் எண்ணெயை ஆர்கான் அல்லது ஜோஜாபா எண்ணெயுடன் கலந்து ஒரு சீரமாக பயன்படுத்தும் பொழுது அது தலைமுடியை சேதத்தில் இருந்து பாதுகாத்து முடி வளர்ச்சியை அதிகமாக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.