சவுக்கு சங்கர் வழக்கில் டுவிஸ்ட்.. நடந்த அதிரடி மாற்றம் : நீதிபதி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2024, 7:40 pm

பிரபல யூடியுபர் சவுக்குசங்கர் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது தனது அறையில் கஞ்சா வைத்திருந்ததாக PC பட்டி காவல்துறை தரப்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கானது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது

இதனிடையே பல்வேறு வழக்குகளில் சிறையில் இருந்த சவுக்குசங்கர் சமீபத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஜாமீனில் உள்ளார்.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையானது நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு விசாரணைக்கு வந்தபோது சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை இதனால் சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித் து நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்

இதையும் படியுங்க: பாஜக நிர்வாகியை படுகொலை செய்த திமுக ரவுடிகள்.. ஆதாரத்துடன் அண்ணாமலை புகார்!!

இந்த நிலையில், சவுக்கு சங்கரை சென்னையில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து சென்னை விரைந்து சென்ற தேனி பிசி பட்டி காவல்துறையினர் தேனிக்கு கொண்டுவந்தனர்.

பின்னர் நேற்றுமுன்தினம் சவுங்கு சங்கரை தேனி PC பட்டி காவல்துறையினர் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமல செல்வன் முன்பாக ஆஜர்படுத்தினர்.

savukku shankar case

அப்போது சவுக்குசங்கர் தரப்பில் பிடியாணையை ரத்துசெய்ய கோரிய மனுவை ஏற்க மறுத்து டிசம்பர் 20 ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்ட நிலையில் இன்று மீண்டும் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கஞ்சா வைத்திருந்த வழக்கு விசாரணையை ஜனவரி 27ஆம்தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் நிர்வாக காரணங்களுக்காக யூடியுபர் சவுக்கு சங்கரின் பிரதான வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வுக்கு மாற்றம் செய்தார்.

Savukku Case

இதனைத் தொடர்ந்து பிடிவாரண்டை ரத்து செய்து தனக்கு ஜாமின் வழங்கவேண்டும் என சவுக்குசங்கர் கோரிய வழக்கில் மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்ட பின்னர் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்

  • Allu Arjun Pushpa2 box office collection புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
  • Views: - 154

    0

    0