இந்த ஒரு நோயிலிருந்து தப்பிக்க தினமும் 5000 படிகள் நடைப்பயிற்சி போதுமானது!!!

Author: Hemalatha Ramkumar
21 December 2024, 3:57 pm

நடைப்பயிற்சி என்பது உடற்பயிற்சியின் மிகவும் அடிப்படையான வடிவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது தினமும் 5000 படிகள் நடப்பதன் மூலமாக மனசோர்வு ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆச்சரியமூட்டும் விதமாக உங்களுடைய தினசரி நடை எண்ணிக்கையும் மன ஆரோக்கியமும் இணைக்கப்பட்டுள்ளது என்பது 2024 ஆம் நடத்தப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இது பற்றிய சில விளக்கமான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

மனசோர்வு என்பது உலக அளவில் மில்லியன் கணக்கான நபர்களை பாதித்து வரும் ஒரு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் தகவலின் படி, தற்போதைய சூழ்நிலையில் 250 மில்லியன் நபர்கள் உலக அளவில் மனசோர்வு பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த ஆய்வின்படி, நடைபயிற்சி போன்ற உடல் செயல்பாட்டில் ஈடுபடுவது மனசோர்வு அறிகுறிகளை குறைக்க உதவும் என்று கூறுகிறது. 96,000 நபர்கள் பங்கு கொண்ட இந்த ஆய்வில் தினமும் 5000 படிகள் நடந்தவர்களுக்கு குறைவான மனசோர்வு அறிகுறிகள் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது.

இதற்கு பின்னணியில் உள்ள அறிவியல் மிகவும் எளிது. நடக்கும்பொழுது நமது உடலில் இயற்கையான மனநிலை மேம்படுத்திகளான எண்டார்பின்கள் வெளியிடப்படுகிறது. தினமும் நடக்கும் பொழுது கார்டிசால் போன்ற மன அழுத்த ஹார்மோன்களும் குறைகிறது. இதனால் உங்களுடைய மனநிலை சீராக பராமரிக்கப்படுகிறது.

எதற்காக 5000 படிகள் என்பது ஒரு மேஜிக் நம்பராக கருதப்படுகிறது? 

10,000 படிகள் என்பது பெரும்பாலும் தினசரி இலக்காக கருதப்பட்டாலும் 5000 படிகள் நடப்பதன் மூலமாகவே நீங்கள் குறிப்பிடத்தக்க மனநலம் சார்ந்த பலன்களை பெற முடியும். தினமும் 5000 முதல் 7049 படிகள் நடந்த நபர்கள் தங்களுடைய மனசோர்வு அறிகுறிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அனுபவித்ததாக இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது உங்களுடைய மனநலனை மேம்படுத்துவதற்கு நீங்கள் ஒரு ஃபிட்னஸ் ஆர்வலராக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

30 முதல் 40 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைபயிற்சியில் ஈடுபடுவதன் மூலமாகவே உங்கள் மனநிலையில் நல்ல ஒரு மாற்றத்தை அனுபவிப்பீர்கள். உங்களுடைய தினசரி நடையின் படி எண்ணிக்கையை 1000 அளவில் கூட நீங்கள் அதிகரிக்கலாம். இது மனசோர்வுக்கான வாய்ப்பை 9% குறைக்கிறது. 7000 படிகள் அல்லது அதற்கும் அதிகமான படிகள் நடக்கும் நபர்களுக்கு மனசோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு 31% குறைகிறது.

நடைப்பயிற்சி நம்முடைய மூளைக்கு எவ்வாறு உதவுகிறது? 

நடை பயிற்சி ஒருவருடைய மனநிலையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் உங்களுடைய மூளை செயல்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தினமும் நடைபயிற்சியில் ஈடுபடுவது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, புதிய மூளை செல்கள் உருவாக்கத்திற்கு உதவுகிறது. இந்த மாற்றங்கள் மனசோர்வை எதிர்த்துப் போராடி, அறிவுத்திறன் செயல்பாட்டை அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக இயற்கை வெளிச்சத்தில் வீட்டிற்கு வெளியே நடைபயிற்சியை மேற்கொள்வது உங்களுடைய தூக்க சுழற்சியை சீராக்கி, பருவகால மனநிலை மாற்றங்களை எதிர்த்து போராடுகிறது.

இதையும் படிச்சு பாருங்க:  தலைமுடிக்கு தேவையான அம்புட்டு பொருளும் வீட்ல இருக்கும்போது நம்ம ஏன் வெளியில அலையணும்!!!

நடைப்பயிற்சியை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுதல் 

*உணவுக்குப் பிறகு 10 நிமிடம் நடைபயிற்சியில் ஈடுபடுவதன் மூலமாக நீங்கள் ஆரம்பிக்கலாம். 

*உங்களுடைய முன்னேற்றத்தை கண்காணிப்பதற்கு நீங்கள் ஃபிட்னஸ் டிராக்கர் அல்லது ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை பயன்படுத்தலாம். 

*ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 5 நாட்கள் நடைபயிற்சியில் ஈடுபடுவதற்கு முயற்சி செய்யுங்கள். 

*உங்களுடைய ஊக்கத்தை அதிகரிப்பதற்காக நண்பர்கள் குடும்பத்தினர் அல்லது உடன் பணிபுரிபவர்களுடன் நடப்பது உங்களுடைய நடைபயிற்சியை இன்னும் சுவாரஸ்யமானதாக மாற்றும்.

*பிசியான நாட்களில் நடைபயிற்சியில் ஈடுபட முடியாவிட்டாலும் லிஃப்ட்டுக்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்துவது, உங்களுடைய வாகனத்தை வெகு தூரத்தில் நிறுத்திவிட்டு பிறகு நடந்து வருவது போன்ற சிறு சிறு மாற்றங்களை நீங்கள் ஏற்படுத்தலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 60

    0

    0

    Leave a Reply