பவுலிங்கில் அசத்தும் சிறுமி: ஜாகீர் இங்க பாருங்க…சச்சின் வெளியிட்ட பதிவு..!
Author: Selvan21 December 2024, 6:32 pm
ஜாகீர் கானை போன்று பவுலிங் செய்த சிறுமி
கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய X தளத்தில்,சிறுமி ஒருவரின் பவுலிங் விடீயோவை பகிர்ந்துள்ளார்.
அதில் அந்த சிறுமியின் பந்து வீசும் ஸ்டைலை பார்த்து வியந்து,முன்னாள் இடது கை பந்துவீச்சாளர் ஜாகீர் கானை ஒப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
சுசிலா மீனா பெயர் கொண்ட அந்த சிறுமி பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீடியோ வைரல் ஆனது.அதில் அவர் ஜாகீர் கானை போல் ஓடி வந்து,அவரை போலவே துள்ளி,பவுலிங் பண்ணுவார்.
இதையும் படியுங்க: தென்காசியில் தலை துண்டித்து ஒருவர் கொலை.. அதிர்ச்சியில் தென்மாவட்டங்கள்!
இதனை பார்த்த சச்சின் ஜாகீர்,இங்க பாருங்க உங்கள மாதிரியே இந்த சிறுமி பந்து வீசுதுன்னு பதிவு போட்டுள்ளார்.
You’re spot on with that, and I couldn’t agree more. Her action is so smooth and impressive—she’s showing a lot of promise already! https://t.co/Zh0QXJObzn
— zaheer khan (@ImZaheer) December 20, 2024
இதற்கு பதில் அளித்த ஜாகீர் கான் நீங்கள் சொல்லுவது மிகவும் சரி.என்னால் இதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது என கூறியுள்ளார்.கிரிக்கெட் ரசிகர்களிடேயே இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.